
மக்களவை தேர்தல் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், தற்போது தவெக கட்சி தலைவர் விஜய் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
அனல் பறக்கும் அரசியல் களம் – முக்கிய அறிக்கையை வெளியிட்ட தவெக கட்சி தலைவர் விஜய்!!
தமிழகம் மற்றும் புதுவை பகுதியில் இன்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. எனவே இந்த நாளை முன்னிட்டு மசூதிகளில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டு வருகின்றனர். மக்களவை தேர்தலுக்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், இந்த நல்ல நாளை முன்னிட்டு இஸ்லாமியர்களுக்கு தமிழக முதல்வர் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அவர் மட்டுமின்றி பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் வாழ்த்துக்களை தெரிவித்த வண்ணம் இருந்து வருகின்றனர்.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
இந்நிலையில் புதிதாக “தமிழக வெற்றிக் கழகம்” என்ற கட்சியை தொடங்கிய தலைவர் விஜய் இஸ்லாமியர்களுக்கு ரமலான் வாழ்த்து தெரிவிக்கும் விதமாக ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக தவெக கட்சியினர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ” புனித ரமலான் மாதத்தில் இறைவனை வேண்டி நோன்பிருந்து, கருணை, சகோதரத்துவம், அன்பு, ஈகை உள்ளிட்ட உயரிய பண்புகளை உலகுக்கு எடுத்துக் கூறும் இஸ்லாமிய உறவுகள் அனைவருக்கும் என் நெஞ்சம் நிறைந்த ரமலான் திருநாள் வாழ்த்துகள்” என தெரிவித்துள்ளார் தவெக கட்சி தலைவர் விஜய்.