
தமிழக வெற்றிக்கழகம் கட்சி கொடி அறிமுக விழா :
தமிழக வெற்றிக்கழகம் கட்சி பாடல் வரிகள்: தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கி நடத்தி வரும் நடிகர் விஜய், இன்று கட்சியின் கொடியை மற்றும் கட்சியின் அதிகாரப்பூர்வ பாடலை அறிமுகம் அறிமுகம் செய்துள்ளார். அந்த வகையில் பனையூரில் உள்ள தவெக கட்சி தலைமை அலுவலகத்தில் அமைந்துள்ள கொடிக்கம்பத்தில் கட்சிக் கொடியை ஏற்றி வைத்த பின்னர், ‘தமிழன் கொடி பறக்குது’ எனத் தொடங்கும் கட்சியின் அதிகாரப்பூர்வ பாடலையும் வெளியிட்டார். தமிழக வெற்றிக்கழகம் கட்சி கொடி அறிமுக விழா விஜய்யின் தந்தை சந்திரசேகர் மற்றும் தாய் சோபனா ஆகியோர் கலந்து கொண்டனர். அத்துடன் நூற்றுக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்றனர்.
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
தமிழக வெற்றிக்கழகம் கட்சி பாடல் வரிகள்
தமிழக வெற்றிக்கழகத்தின் கட்சி கொடியை அறிமுகம் செய்து வைத்த விஜய், இதனை தொடர்ந்து கட்சியின் பாடலையும் அறிமுகப்படுத்தினார். ‘தமிழன் கொடி தலைவன் கொடி’ என தொடங்கும் பாடலில் தமிழ்நாடு மற்றும் தமிழ் மொழியின் சிறப்பை வெளிப்படுத்தும் வகையில் பல்வேறு வரிகள் இடம் பெற்றுள்ளன.
“தமிழன் கொடி பறக்குது.. தலைவன் யுகம் பொறக்குது..
மூணெழுத்து மந்திரத்தை மீண்டும் காலம் ஒலிக்குது..
சிறுசும் பெருசும் ரசிக்குது..
சிங்க பெண்கள் சிரிக்குது..
மக்களோட தொப்புள் கொடியில் மொளச்ச கொடியும் பறக்குது..
மனசுல மக்களை வைக்கும் தலைவன் வரும் நேரமிது..
மக்களும் அவன மனசில் வச்சு ஆடிப்பாடி கூப்பிடுது..
சிகரம் கிடைச்ச பின்னும் இறங்கி வந்து சேவை செஞ்சு..
நீங்க கொடுத்த எல்லாத்துக்கும் நன்றி காட்டும் காலம் இது..
தமிழா தமிழா நம்ம வாழ போறமே..
ஒரு கரை இல்லாத கைய புடிச்சு போகப் போறோமே..
தமிழன் கொடிடி தலைவன் கொடி.. தர்மக்கொடி தரையின் கொடி.. வீரக் கொடி விஜயக் கொடி.. ஆதி கொடிய காக்கும் கொடி..
ரத்த சிவப்பில் நிறமெடுத்து ரெட்டை யானை பலம் கொடுத்தோம்..
நரம்பில் ஓடும் தமிழ் உணர்வ உருவி உருக் கொடுத்தோம்..
மஞ்சள் எடுத்து அலங்கரிச்சோம்..
பச்சை நீல திலகம் வச்சோம்..
பரிதவிக்கும் மக்கள் பக்கம் சிங்கம் வர்ரத பறையடிச்சோம்..
தூரம் நின்னு பாக்கும் தலைவன் காலமெல்லாம் மாறுது..
தோளில் வந்து கையை போடும் தலைவன் கொடி ஏறுது..
அரசரைக் கேள்வி கேட்கும் தளபதியின் காலமடி..
அன்னைக்கே சொன்னோமே இது ஆளப்போற தமிழன் கொடி..”
இதனை தொடர்ந்து தமிழன் கொடி பறக்குது, தலைவன் யுகம் பொறக்குது போன்ற விஜயின் அரசியல் வருகையை கொண்டாடும் விதமாக தவெக கட்சி பாடலில் சிறப்பான வரிகள் இடம்பெற்றுள்ளன.
தவெக கட்சியின் கொடி அறிமுகப்படுத்திய தலைவர் விஜய் – ஆரவாரத்துடன் வரவேற்ற நிர்வாகிகள்!
தவெக மாநில மாநாடு :
இதனை தொடர்ந்து தமிழக வெற்றிக்கழகத்தின் கட்சி கொடியை ஏற்றி வைத்து உரையாற்றிய விஜய், கொடியில் இடம்பெற்றுள்ள இரட்டை யானை மற்றும் வாகை மலர், கருஞ்சிவப்பு மஞ்சள் வண்ணத்திற்கு பின் ஒரு வரலாறு உள்ளது. மேலும் அதற்கான விளக்கத்தை தவெக மாநில மாநாட்டில் விரிவாக தெரிவிப்பதாக கூறினார்.
மேலும் தமிழக வெற்றிக்கழகத்தின் மாநில மாநாடு குறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என கூறினார். அதுவரை நமது கொடியை ஏற்றி கொண்டாடுங்கள் என்று கட்சி கொடி அறிமுக விழாவில் விஜய் உரையாற்றினார்.