தவெக கட்சியின்  முதல் நிகழ்வு - ஜூன் 28ல் களமிறங்கும் TVK தலைவர் விஜய் - பரபரப்பு அறிக்கையை வெளியிட்ட ஆனந்த்!தவெக கட்சியின்  முதல் நிகழ்வு - ஜூன் 28ல் களமிறங்கும் TVK தலைவர் விஜய் - பரபரப்பு அறிக்கையை வெளியிட்ட ஆனந்த்!

தவெக கட்சியின்  முதல் நிகழ்வு – ஜூன் 28ல் களமிறங்கும் TVK தலைவர் விஜய்: நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் “தமிழக வெற்றிக் கழகம்” என்ற கட்சியை தொடங்கினார். மேலும் 2026ல் நடக்க இருக்கும் சட்டமன்ற பொதுத்தேர்தல் தான் இலக்கு என்று அறிக்கையில் அறிவித்திருந்தார். இதனை தொடர்ந்து ஒரு ஆப்பை தயார் செய்து அதன் மூலம் தனது கட்சியின் உறுப்பினர்களை சேர்த்தார். இருப்பினும் அவருடைய முதல் மாநாடு எங்கே நடக்க போகிறது என்பது குறித்த எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் அதிகமாக இருந்து வருகிறது. மேலும் மதுரையில் நடக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தவெக கட்சியின் பொது செயலாளர் ஆனந்த் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

அதில், கடந்த ஆண்டு 12 மற்றும் 10ம் வகுப்பில் தொகுதி வாரியாக  அதிக மதிப்பெண் வாங்கிய முதல் மூன்று மாணவர்களை வரவழைத்து விஜய் பரிசு தொகை வழங்கினார். குறிப்பாக 12ம் வகுப்பில் 600க்கு 600 வாங்கிய நந்தினிக்கு வைர நெக்லஸ் பரிசளித்தார். தற்போது அதே போல் இந்த வருடம் அதிக மதிப்பெண் வாங்கிய மாணவர்களை தலைவர் விஜய் கௌரவிக்க இருக்கிறார். ஆனால் இம்முறை இரண்டு கட்டங்களாக விழா நடைபெற இருக்கிறது.

அதன்படி வருகிற ஜூன் 28ம் தேதி வெள்ளிக்கிழமை அன்று,  சென்னை, திருவான்மியூரில் உள்ள ஸ்ரீ ராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டரில் பாராட்டு விழா நடக்கிறது. இதில் மதுரை, தென்காசி, தேனி, நாமக்கல், நீலகிரி, புதுக்கோட்டை,  அரியலூர், திருநெல்வேலி, திருப்பூர், விருதுநகர், கோயம்புத்தூர், தர்மபுரி, திண்டுக்கல், ஈரோடு, கன்னியாகுமரி, கரூர், கிருஷ்ணகிரி, ராமநாதபுரம், சேலம், சிவகங்கை,  தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் பாராட்டப் பெறுகிறார்கள்.

இதனை தொடர்ந்து வருகிற ஜூலை 3ம் தேதி புதன்கிழமை அன்று தஞ்சாவூர், திருவள்ளூர், திருவண்ணாமலை, திருவாரூர், வேலூர், விழுப்புரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், பெரம்பலூர், திருப்பத்தூர், திருச்சி, செங்கல்பட்டு,  சென்னை, கடலூர், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், காரைக்கால், புதுச்சேரி, ராணிப்பேட்டை உள்ள மாணவர்கள் கலந்து கொள்வார்கள் என்றும் அவர்களுக்கு தலைவர் விஜய் பரிசளிப்பர் எனவும் ஆனந்த் தெரிவித்துள்ளார்.  TVK Party – thalapathy vijay – kollywood king maker – box office collection king – best actor in tamil cinema – best dancer

சுற்றுலா பயணிகளே குட் நியூஸ்… இந்த இடத்தில் குளிக்க அனுமதி.. அப்புறம் என்ன ஒரு ட்ரிப்ப போடுங்க!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *