சீமானுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன விஜய் - அண்ணனுக்கு வாழ்த்து தெரிவித்த தம்பி !சீமானுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன விஜய் - அண்ணனுக்கு வாழ்த்து தெரிவித்த தம்பி !

தற்போது சீமானுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன விஜய், தமிழக வெற்றிக்கழக மாநாட்டில் விஜய் தெரிவித்த கருத்துக்களுக்கு கடுமையான விமர்சனங்களை தெரிவித்திருந்தார் சீமான்.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று தனது 58-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இந்நிலையில் அவரது பிறந்த நாளை ஒட்டி அவரது கட்சியினரும், அரசியல் தலைவர்களும் சமூக வலைதள பக்கங்கள் வாயிலாக வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

இதனையடுத்து தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் கடந்த 27 ஆம் தேதி தனது கட்சியின் முதல் மாநில மாநாட்டை நடத்தினார். மேலும் அந்த மாநாட்டில் விஜய் சீமானை மறைமுகமாக விமர்சித்தார். மேலும், ‘திராவிடமும் தமிழ் தேசியமும் இரு கண்கள்’ என்றும் குறிப்பிட்டு இருந்தார்.

இதனை தொடர்ந்து விஜய்யின் பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பேசிய சீமான், விஜயை கடுமையாக விமர்சித்தார். அத்துடன் விஜய்யின் கொள்கை தெளிவாக இல்லை எனவும், ” எங்கள் லட்சியத்துக்கு எதிராக பெற்றவர்களே வந்தாலும் எதிரி எதிரி தான். மேலும் அதில் தம்பியும் கிடையாது. அண்ணனும் கிடையாது. இது கொள்கை இல்லை. கூமுட்டை, அதுவும் அழுகின கூமுட்டை” என்று மிகக் கடுமையாக சாடியிருந்தார்.

இந்த நிலையில் நடிகரும், தமிழக வெற்றிக்கழக தலைவருமான விஜய் சீமானுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக விஜய் தனது எக்ஸ் தளத்தில், “நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சகோதரர் சீமான் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *