TVK மாநாட்டில் உயிரிழந்த தொண்டர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி - தலைவர் விஜய் அறிவிப்பு !TVK மாநாட்டில் உயிரிழந்த தொண்டர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி - தலைவர் விஜய் அறிவிப்பு !

தற்போது TVK மாநாட்டில் உயிரிழந்த தொண்டர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி அவர்களின் குடும்ப சூழலுக்கு ஏற்றார்போல் ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட முறையில் தலைவர் விஜய் நிதி வழங்கியுள்ளார் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய், தற்போது சினிமாவில் இருந்து முழுவதுமாக விலகி தற்போது முழுநேர அரசியலில் இறங்கியுள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன் அவர் தனது கட்சி பெயர், கொடி அறிமுகம் உள்ளிட்டவற்றை அறிமுகம் செய்தார்.

இதனை தொடர்ந்து தனது கட்சியின் முதல் மாநில மாநாட்டை கடந்த அக்டோபர் மாதம் 27ம் தேதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் நடத்தி முடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை தொடர்ந்து இந்த மாநாட்டில் அவர் தவெகவின் கொள்கை, அரசியல் எதிரி, சித்தாந்த எதிரி உள்ளிட்டவற்றை அறிவித்தார்.

இந்த மாநாட்டில் பங்கேற்ற தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் தவெகவின் தொண்டர்களும், விஜய்யின் ரசிகர்களும் வருகை தந்தனர்.

மேலும் இதில், திருச்சியில் இருந்து காரில் சென்ற சீனிவாசன் மற்றும் கலைக்கோவன் ஆகிய இருவர் விபத்தில் சிக்கி உயிரிழந்தனர்.

இதனை தொடர்ந்து சென்னையில் இருந்து இருசக்கர வாகனத்தில் புறப்பட்டு சென்ற ஒருவர் சாலை விபத்தில் உயிரிழந்தார்.

அத்துடன் சென்னை கீழ்ப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த சார்லஸ் என்பவர் மாநாட்டு திடலில் மயங்கி விழுந்து பிறகு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் பரிதாபமாக உயிரிழந்தார். இவ்வாறு வெவ்வேறு வகையில் தவெக மாநாட்டில் பங்கேற்க வந்த ஆறு நபர்கள் உயிரிழந்தனர் என்று தகவல் வெளியானது.

அந்த வகையில் தவெக மாநாட்டிற்கு வந்தபோதும், மாநாட்டு திடலிலும், மாநாடு முடித்து சென்றபோதும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தவெக தலைவர் விஜய் இன்று நிதியுதவி அளித்துள்ளார்.

இதனையடுத்து உயிரிழந்த ஆறு பேரின் குடும்பத்தினரும் தவெகவின் பனையூர் அலுவலகத்திற்கு வரவழைத்த தவெக தலைவர் விஜய், அவர்களின் குடும்ப சூழலுக்கு ஏற்றார்போல் ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட முறையில் நிதி வழங்கியுள்ளார் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *