Home » செய்திகள் » பரந்தூர் மக்களை சந்திக்க தவெக தலைவர் விஜய்க்கு கட்டுப்பாடு விதிப்பு – காவல்துறை அறிவிப்பு!

பரந்தூர் மக்களை சந்திக்க தவெக தலைவர் விஜய்க்கு கட்டுப்பாடு விதிப்பு – காவல்துறை அறிவிப்பு!

பரந்தூர் மக்களை சந்திக்க தவெக தலைவர் விஜய்க்கு கட்டுப்பாடு விதிப்பு - காவல்துறை அறிவிப்பு!

தற்போது பரந்தூர் மக்களை சந்திக்க தவெக தலைவர் விஜய்க்கு கட்டுப்பாடு விதிப்பு, இது பற்றிய தகவல்கள் காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிராக போராடிவரும் போராட்ட குழுவினர் மற்றும் கிராம மக்களை சந்தித்து ஆதரவு தர உள்ளார் என்று அறிவிக்கப்பட்டது. மேலும் அதற்கு அனுமதி வேண்டும் என காஞ்சிபுரம் காவல்துறையிடம் கட்சியினர் அனுமதி கேட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் போராட்டக் குழுவினரை விஜய் சந்திக்க உள்ள இடம் தற்போது வேகமாக தயாராகி வருகிறது. அத்துடன் தயாராகி வரும் இடத்திற்கு நேற்று கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டார்.

அதன் பின்னர் பரந்தூரில் இருக்கக்கூடிய தனியார் திருமண மண்டபத்தையும் போராட்டக் குழுவினருடன் சென்று பார்வையிட்டனர்.

இதனை தொடர்ந்து “விஜய் ஜனவரி 20ஆம் வருவதற்கு பாதுகாப்பு மற்றும் அனுமதி அளித்துள்ளோம்” என காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார். மேலும் ஏகனாபுரம் கிராமம் அருகே அம்பேத்கர் திடல் பகுதியில் பிரச்சார வேன் மூலம் ஏகனாபுரம் கிராம மக்களிடம் மற்றும் பரந்தூர் விமான நிலைய திட்ட எதிர்ப்பு போராட்டக் குழுவினரிடம் விஜய் உரையாற்ற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அந்த வகையில் விஜய் கட்சி ஆரம்பித்த பிறகு முதல் முறையாக மக்களை நேரடியாக களத்திற்கு சென்று சந்திக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

தவெக தலைவர் விஜய் மக்களை சந்திப்பதில், காவல்துறை தரப்பில் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அவை,

அனுமதிக்கப்பட்ட வாகனத்தில், அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையில்தான் வர வேண்டும்

அனுமதியளித்த இடத்தில் மட்டும்தான் மக்களை விஜய் சந்திக்க வேண்டும்

அதிக கூட்டம் கூட்டாமல் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையிலான நபர்களே வர வேண்டும்

எந்த இடத்தில் விஜய் மக்களை சந்திக்க உள்ளார் என்பது குறித்து இன்று மாலை முடிவெடுக்கப்படும்; அங்கு குறிப்பிட்ட நேரத்தில்தான் மக்களை விஜய் சந்தித்து முடிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top