அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்கும் தவெக தலைவர் விஜய் - புறக்கணித்த திருமாவளவன் !அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்கும் தவெக தலைவர் விஜய் - புறக்கணித்த திருமாவளவன் !

வரும் டிசம்பர் 6 ம் தேதி அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்கும் தவெக தலைவர் விஜய் தொடர்ந்து திருமாவளவன் இந்த நிகழ்ச்சியை புறக்கணித்து உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

வாய்ஸ் ஆஃப் காமென் எனும் அமைப்பின் நிறுவனரும், விசிகாவின் துணைப் பொதுச்செயலாளர்களில் ஒருவருமான ஆதவ் அர்ஜுனாவின் “எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர் ” என்ற புத்தக வெளியீட்டு விழா வரும் டிசம்பர் மாதம் 6 ஆம் தேதி நடைபெற உள்ளது.

மேலும் இந்த விழாவில் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் ஆகியோர் பங்கேற்பார்கள் என தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.

இதனை தொடர்ந்து அம்பேத்கர் புத்தகத்தை விஜய் வெளியிட, அதனை விசிக தலைவர் திருமாவளவன் பெற்றுக்கொள்வார் என கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது இந்த புத்தக வெளியீட்டு விழா குறித்த அழைப்பிதழ் வெளியாகியுள்ளது.

அந்த அழைப்பிதழில் திருமாவளவனின் பெயர் இடம் பெறவில்லை. இதற்க்கு மாறாக ‘எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ நூலை தவெக விஜய் வெளியிட,

அதனை திருமாவளவனுக்கு பதிலாக, சென்னை உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதியரசர் சந்துரு பெற்றுக் கொள்கிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த அழைப்பிதழ் முக்கிய பிரமுகர்களுக்கு கொடுக்கப்பட்டு வருகிறது. இதனையடுத்து கட்சியின் நிர்வாகி நடத்தும் புத்தக வெளியீட்டு விழாவில் அக்கட்சியின் தலைவரான திருமாவளவன் பங்கேற்காதது தற்போது பெரும் பேசு பொருளாகியுள்ளது.

அத்துடன் விஜய்யுடன் ஒரே மேடையை பகிர விரும்பாதததால் திருமாவளவன், இந்த நிகழ்ச்சியை புறக்கணித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அந்த வகையில் விஜய்யும் திருமாவளவன் புத்தக வெளியீட்டு விழாவில் ஒரே மேடையில் பங்கேற்க உள்ளதாக தகவல் பரவியது. இதற்கு ஆளும் கட்சியான திமுக தரப்பில் இருந்து அதிருப்தி வெளியானதாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில் அரசியல் அழுத்தம் காரணமாகவே திருமாவளவன் இந்த நிகழ்ச்சியை புறக்கணித்து உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *