
சென்னை பெரியார் திடலில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு விஜய் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தற்போது இந்த சம்பவம் தமிழ்நாடு அரசியலில் பேசுபொருளாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
தந்தை பெரியார் சிலைக்கு விஜய் மாலை அணிவித்து மரியாதை
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
தந்தை பெரியார் :
திராவிடர் கழக தலைவர் தந்தை பெரியாரின் பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சியை சார்த்த தலைவர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் உட்பட பலரும் பெரியாரின் பிறந்தநாளை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
நடிகர் விஜய் வாழ்த்து :
இதனையடுத்து தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய் அரசியல் கட்சிக்கான தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் வலைதளப் பக்கத்தில்,
” சாதி, மத ஆதிக்கம் மற்றும் மூடப்பழக்க வழக்கங்களால் விலங்கிடப்பட்டுக் கிடந்த தமிழக மக்களிடையே விழிப்புணர்வை விதைத்தவர்;
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற சுய விடுதலை வேட்கையின் மூலம், ஏற்றத் தாழ்வுகளால் உண்டாக்கப்பட்ட அடிமைத் தளைகளை அறுத்தெறிந்தவர்; மக்களைப் பகுத்தறிவு மனப்பான்மையுடன் போராடத் தூண்டியவர்;
சமூக சீர்திருத்தவாதி, பகுத்தறிவுப் பகலவன், தென்னகத்தின் சாக்ரட்டீஸ், தந்தை பெரியார் அவர்களின் பிறந்த நாளில், அவர் வலியுறுத்திய பெண் உரிமை, பெண்கல்வி, பெண்கள் பாதுகாப்பு, சமத்துவம், சம உரிமை, சமூகநீதிப்பாதையில் பயணிக்க உறுதியேற்போம்!” என்று பதிவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் இனி வெள்ளம் வராது – அரசு கொண்டு அசத்தலான சூப்பர் திட்டம்!
பெரியார் திடலில் மாலை அணிவித்து மரியாதை :
அந்த வகையில் சென்னை பெரியார் திடலிலுள்ள தந்தை பெரியாரின் நினைவிடத்திற்கு நேரில் சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தியிருக்கிறார் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்.
அத்துடன் அறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் அன்று அவரை போற்றி பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது,
இதனையடுத்து விநாயகர் சதூர்த்திக்கு வாழ்த்து தெரிவிக்காமல் ஓணம் பண்டிக்கைக்கு வாழ்த்து தெரிவித்தது போன்ற பல விஷயங்களால் விஜய் தனது அரசியல் நிலைப்பாட்டை காட்டுகிறார் என விமர்சனங்கள் எழுந்த நிலையில்,
தற்போது பெரியார் திடலுக்கு நேரில் சென்று மரியாதை செலுத்தியதும் அரசியல் வட்டாரத்தில் பேசு பொருளாகியிருக்கிறது.