தவெக புதுச்சேரி பொறுப்பாளர் சரவணன் மறைவு - தலைவர் விஜய் இரங்கல்!தவெக புதுச்சேரி பொறுப்பாளர் சரவணன் மறைவு - தலைவர் விஜய் இரங்கல்!

தவெக புதுச்சேரி பொறுப்பாளர் சரவணன் மறைவு: நடிகர் விஜய் தற்போது தளபதி 69 படத்தில் நடித்து வருகிறார். இது அவருடைய கடைசி படம் என்பது நாம் அறிவோம். எனவே அவரின் கடைசி படத்திற்கு தளபதி ரசிகர்கள் மட்டுமின்றி மற்ற நடிகர்களின் ரசிகர்களும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தனர். tvk party news

தவெக புதுச்சேரி பொறுப்பாளர் சரவணன் மறைவு

இதனை தொடர்ந்து விஜய் கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை நிறுவினார். ஒரு பக்கம் சினிமா இன்னொரு பக்கம் அரசியல் என செம்ம பிஸியாக இருந்து வருகிறார். மேலும் கட்சியின் முதல் மாநாடு வருகிற அக்டோபர் 27 விக்கிரவாண்டி பகுதியில் நடக்க இருக்கிறது.

இப்படி இருக்கையில், தவெக புதுச்சேரி பொறுப்பாளர் திடீரென இறந்த சம்பவம் தவெகவினர் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் அவரின் மறைவுக்கு அக்கட்சியின் தலைவரும், நடிகருமான விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது, “தமிழக வெற்றிக் கழகத்தின் புதுச்சேரி மாநில நிர்வாகி, என் மீதும் கட்சியின் மீதும் தீராப் பற்றுக் கொண்டவர்.

தீபாவளிக்கு 14016 சிறப்பு பேருந்துகள் 2024 – எந்த பகுதிகளுக்கு தெரியுமா? – அமைச்சர் சிவசங்கர் அறிவிப்பு!

கழகத்திற்காக அயராது ஓடோடி உழைத்த கழக போராளி புதுச்சேரி சரவணன் திடீர் உடல்நலக் குறைவு காரணமாக மறைந்த சம்பவம் அதிர்ச்சியையும் மிகுந்த மன வேதனையையும் அளிக்கிறது.

அவரைப் பிரிந்து வாடும் அவருடைய குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார். kollywood king thalapathy vijay

இதையும் கொஞ்சம் படிங்க பாஸ்

பீகாரில் கள்ளச்சாராயம் குடித்த 27 பேர் பலி – மீண்டும் அரங்கேறும் சோகம்!

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டி 2024 – 46 ரன்னுக்கு 9 விக்கெட் 

ரேஷன் அட்டை தாரர்களுக்கு குஷியான செய்தி

புதிய நீதி தேவதை சிலை திறப்பு – என்னென்ன மாற்றங்கள் தெரியுமா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *