ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்டவர்களை பனையூரில் உள்ள அலுவலகத்துக்கு வரவழைத்து TVK தலைவர் விஜய் நிவாரணம் வழங்கிய -தாக தகவல் வெளியாகியுள்ளது.
TVK தலைவர் விஜய்:
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி தற்போது முழு அரசியல்வாதியாக செயல்பட்டு வருகிறார். தொடர்ந்து மக்களுக்கு பாடு பட வேண்டும் என்று உறுதிமொழி ஏற்று அரசியலில் முழு தீவிரமாக இருந்து வருகிறார். அதுமட்டுமின்றி தமிழகத்தில் இருக்கும் நிர்வாகிகள் மக்களுக்கு ஏதோ ஒரு விதத்தில் உதவி செய்து வருகின்றனர்.
பனையூரில் நிவாரணம் வழங்கிய TVK விஜய் – இறங்கி வேலை செய்யும் தவெக நிர்வாகிகள்!
இதனை தொடர்ந்து கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதற்கிடையில், கடந்த சனிக்கிழமை வங்கக் கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் மரக்காணம் அருகே கரையைக் கடந்து சென்றது. இதன் காரணமாக, விழுப்புரம், கடலூர் மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு வீட்டுக்குள்ளே இருக்கும் சூழ்நிலை ஏற்பட்டது.
பெண்களுக்கு ரூ. 20000 மதிப்புடைய சூரிய அடுப்பு – அசத்தல் திட்டத்தை கொண்டு வந்த அரசு!
மேலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசியல்வாதிகள் முதல் சினிமா பிரபலங்கள் வரை தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகின்றனர். அந்த வகையில், தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பாக தலைவர் விஜய், பனையூரில் உள்ள அலுவலகத்துக்கு கிட்டத்தட்ட 250 பேருக்கு நிவாரண உதவி வழங்கினார். மீதமுள்ள மக்களுக்கு தவெக பொது செயலாளர் புஷ்ஷி ஆனந்த் தலைமையில் களத்திற்கு சென்று நிவாரண உதவி வழங்கி வருகிறார் என்று கூறப்படுகிறது.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்