Home » செய்திகள் » அமித்ஷாவை கண்டித்த தவெக விஜய் – அம்பேத்கருக்காக களத்தில் இறங்கிய தளபதி!

அமித்ஷாவை கண்டித்த தவெக விஜய் – அம்பேத்கருக்காக களத்தில் இறங்கிய தளபதி!

அமித்ஷாவை கண்டித்த தவெக விஜய் - அம்பேத்கருக்காக களத்தில் இறங்கிய தளபதி!

உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கண்டித்த தவெக விஜய், அம்பேத்கருக்காக களத்தில் இறங்கி எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

TVK VIJAY:

நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி அக்டோபர் 27ம் தேதி தனது முதல் மாநாட்டை விக்கிரவாண்டியில் பிரம்மாண்டமாக நடத்தினார். இந்த முதல் மாநாட்டில் கிட்டத்தட்ட 7 லட்சம் பேர் வரை கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. இதில் கூட்ட நெரிசலில் சிலர் உயிரிழந்த நிலையில் அவர்களுக்கு நிதி உதவி வழங்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தவெக கட்சி நடத்திய முதல் மாநாட்டில் தலைவர் விஜய் அனல் பறக்க பேசினார் என்று தான் சொல்ல வேண்டும். திமுகவை நேரடியாக தாக்கி பேசினார்.

இதனால் அரசியல் களத்தில் பெரும் சர்ச்சைகளை எழுப்பியது. இதில் சில உயிரிழப்புகள் ஏற்பட்ட நிலையில், விஜய்யை தாக்கி பேசி வந்தனர். மேலும் மாநாட்டில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு விஜய் நிதியுதவி வழங்கினார். சமீபத்தில் அம்பேத்கர் புக் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு புத்தகத்தை வெளியிட்டார்.

ஏனென்றால் விஜய் கட்சியின் கொள்கை தலைவராக அம்பேத்கர் இருந்து வருகிறார். இந்நிலையில்,  ராஜ்யசபாவில் பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ” அம்பேத்கர், அம்பேத்கர், என்று கூறுவது இப்போது ஒரு ஃபேஷன் ஆகிவிட்டது. இதற்கு பதில், கடவுளின் பெயரை 7 முறை சொல்லியிருந்தால், அவர்களுக்கு சொர்க்கத்திலாவது இடம் கிடைத்திருக்கும் என கூறிருந்தார்.

இது அரசியலில் பெரும் சர்ச்சையை கிளப்பி வருகிறது. மேலும் பல்வேறு அரசியல் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது, தவெக தலைவர் விஜய் எதிர்ப்பு தெரிவித்து ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், ” யாரோ சிலருக்கு வேண்டுமானால் அம்பேத்கர் பெயர் ஒவ்வாமையாக இருக்கலாம். சுதந்திரக் காற்றை சுவாசிக்கும் இந்திய மக்கள் அனைவருக்கும் அவர்கள் உயரத்தில் வைத்துப் போற்றும் ஒப்பற்ற அரசியல் மற்றும் அறிவுலக ஆளுமை, அவர். எங்கள் கொள்கை தலைவரை அவமதிப்பதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. அண்ணலை அவமதித்த ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சரை, தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக வன்மையாக கண்டிக்கிறேன் ” என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். 

உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்

கலைஞரின் கனவு இல்லம் திட்டம்! வீடு கட்ட ரூ 3.50 லட்சம் கொடுக்கும் அரசு

ஹோம் ஆப் செஸ் அகாடமி .., குகேஷ் பாராட்டு விழாவில் முதல்வர் முக ஸ்டாலின் பேச்சு!

செகண்ட் ஹேண்ட் வாகனங்களுக்கு 18% ஜிஎஸ்டி வரி – வெளியான ஷாக்கிங் தகவல்!!

ATMல் ரிசர்வ் வங்கி கொண்டு வந்த புதிய விதி – இனி இந்த மோசடி செய்ய முடியாது!

தமிழகத்தில் நாளை (19.12.2024) மின்தடை பகுதிகள்! மின்சார வாரியம் வெளியிட்ட அறிவிப்பு !

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top