தலைவர் விஜய் சொன்ன சிறு வயது பாண்டிய மன்னன் யார்: விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு விக்கிரவாண்டியில் நேற்று பிரம்மாண்டமாக நடைபெற்றது.
இதில் பேசிய கட்சி தலைவர் விஜய், வழக்கம் போல ஒரு குட்டி ஸ்டோரி சொன்னார்.
அதாவது சிறு வயதில் போருக்கு சென்ற ஒரு பாண்டிய மன்னன் வரலாறு குறித்த கதை கூறினார்.
ஆனால் அந்த மன்னனின் பெயரை சொல்லாமல் அதை தொண்டர்கள் தேடி தெரிந்து கொள்ளுமாறு கூறினார்.
தலைவர் விஜய் சொன்ன சிறு வயது பாண்டிய மன்னன் யார்
இல்லையென்றால் தெரிந்தவரிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் என்று கூறினார். விஜய் கூறிய சிறுவயது பாண்டிய மன்னன் யார் என்று பலரும் இணையத்தில் தேடி வருகின்றனர். எனவே அந்த மன்னன் யார் என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம் வாங்க. தவெக கட்சி தலைவர் விஜய் சொன்ன குட்டி ஸ்டோரியில் இடம்பெற்ற சிறுவயது பாண்டிய மன்னன் வேறு யாரும் இல்லை, மதுரையை ஆண்ட தலையாங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் தான்.
இவர் பாண்டிய மன்னனாக முடிசூட்டிக் கொண்ட போது தனது முதல் போரிலேயே சோழ, சேர அரசர்களை ஒன்றாக எதிர்கொண்டான். அப்போது அவருக்கு சின்ன வயசு என்பதால் அவரை ஈசியாக சாய்த்து விடலாம் என எண்ணி, சோழர் படை போரை தொடர்ந்த நிலையில், வீரமிகு நெடுஞ்செழியன் எதிரிப்படைகளை தலையாங்கானம் என்ற ஊரில் எதிர்கொண்டு சண்டையிட்டார்.
தவெக தலைவர் விஜய்யின் பேச்சுக்கு வலுக்கும் எதிர்ப்பும் ஆதரவும் – இணையத்தில் குவியும் கருத்துக்கள்!
சிறுவனின் பலத்தை பார்த்து பின்வாங்கிய படைகள் சோழ தேசத்திற்குள்ளேயே திரும்ப ஓடியபோது நெடுஞ்செழியன் விரட்டி சென்று போரை வென்றதால் அவன் தலையாங்கானத்து செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் என அழைக்கப்பட்டார். அதுமட்டுமின்றி அவருக்கு நெடுஞ்செழியனுக்கு மறப்போர்ச் செழியன், கடும்பகட்டு யானை நெடுந்தேர் செழியன் என்ற பட்ட பெயர்களும் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.
செம்ம லுக்கில் வந்த TVK தலைவர் விஜய்
புனே டெஸ்ட் 2வது இன்னிங்ஸ் – நியூசிலாந்து 255 ரன்னில் ஆல் அவுட்
தமிழ்நாட்டில் இன்று 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு விமானங்களில் சிறப்பு