சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இன்று மதியம் ஆளுநரை சந்திக்கும் தவெக தலைவர் விஜய் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது சோசியல் மீடியாவில் எங்கு சென்று பார்த்தாலும் பேசப்பட்டு வரும் செய்தி என்றால் அது அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு நடந்த துஷ்பிரயோகம் பற்றி தான். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை கிளப்பிய நிலையில், பல இடங்களில் போராட்டம் வெடித்தது. மேலும் இச்சம்பவத்தில் கோட்டூரைச் சோ்ந்த பிரியாணி கடைக்காரரும் மற்றும் திமுகவை சேர்ந்தவருமான ஞானசேகரன் என்பவர் அதிரடியாக கைது செய்யப்பட்டாா்.
ஆளுநரை சந்திக்கும் தவெக தலைவர் விஜய்.., என்ன காரணம் தெரியுமா?
அதுமட்டுமின்றி இந்த விவகாரத்தில் ஒரு ஆசிரியர் சம்மந்தப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகிய நிலையில், பாஜக, அதிமுக கட்சி போராட்டம் நடத்தி வந்தனர். இதனை தொடர்ந்து நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் கண்டனம் தெரிவித்து இருந்தார்.
அமெரிக்க முன்னாள் அதிபர் ஜிம்மி கார்டர் மறைவு.., உலக தலைவர்கள் இரங்கல்!!
அதுமட்டுமின்றி, அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நடந்த அநீதிக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்றும், இது தொடர்பாக இன்று பகல் 1 மணிக்கு சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு வந்திருக்கும், தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியை நேரில் சந்தித்து தவெக தலைவர் மனு கொடுக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த சந்திப்பு மூலம் பாதிக்கப்பட்ட மாணவிக்கு விரைவில் நியாயம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக, விஜய் பெண்களுக்கு ஆதரவாக ஒரு அறிவிப்பை வெளியிட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்
ஜனவரி 2025ல் பாஜகவின் புதிய தேசிய தலைவர் நியமனம்! பதவி ரேஸில் உள்ள முக்கிய புள்ளிகள்!
PSLV – C60 ராக்கெட் விண்ணில் ஏவப்படும் நேரம் மாற்றம் – இஸ்ரோ அறிவிப்பு!
அரசு பேருந்தில் POLICE இலவசமாக பயணிக்கலாம்.., வெளியான முக்கிய அறிவிப்பு!
2024ன் கடைசி நாளன்று (31.12.2024) மின்தடை செய்யப்படும் பகுதிகள்! TANGEDCO வெளியிட்ட அறிவிப்பு!
2025 இல் இத்தனை ஞாயிற்றுக்கிழமையா! அடேங்கப்பா இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே