நடிகர் தவெக TVK தலைவர் விஜய் -யை பரந்தூர் களத்திற்கு வரவைத்த சிறுவன் ராகுல் யார் என்பது குறித்து இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிராக போராடும் விவசாயி மக்களை நேரில் சந்தித்து பேசினார். அவரை காண மக்கள் கூட்டம் அலைமோதியது. இதனை தொடர்ந்து பேசிய தளபதி விஜய், திமுக, பாஜக ஆட்சியை விமர்சித்து இருந்தார். அதுமட்டுமின்றி, சிறுவன் ராகுலின் பேச்சு “என்னை பாதித்து விட்டது” என கூறி இருந்தார். அவர் பேசியது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
TVK தலைவர் விஜய் யை பரந்தூர் களத்திற்கு வரவைத்த சிறுவன்.., யார் இந்த ராகுல்?.., முழு விவரம் உள்ளே!!
இந்நிலையில் யார் அந்த சிறுவன் ராகுல்? அவர் பேசியது என்ன என்று பலரும் இணையத்தில் தேடி வருகின்றனர். காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் இருந்த சிறுவன் ராகுல் ஒருவன் பேசும்போது, “பரந்தூரில் எங்களுக்கு விமான நிலையம் வேண்டாம். இங்கு இருக்கும் விவசாய நிலங்களையும், ஏரியையும், பள்ளிகளையும் அப்படியே விட்டால் போதும். அப்பிடியும் இங்கே ஏர்போர்ட் வந்தாலும் கூட நாங்கள் என்ன மேலயா பறக்க போகிறோம்.
பரந்தூர் மக்களுடன் கடைசி வரை உறுதியாக நிற்பேன் – தவெக தலைவர் விஜய் பரபரப்பு பேச்சு!!
அதுமட்டுமின்றி, இங்கு விமான நிலையம் வந்தால் நாங்கள் படிக்கும் பள்ளி பாதிக்கப்படும். அரசியல்வாதி பிள்ளைகள் படித்து பெரியாளாக வேண்டும். அப்படியென்றால் நாங்கள் படித்து பெரியாளாக வேண்டாமா. இங்கு விவசாய நிலங்கள் இருப்பதால் தான் நாங்கள் சாப்பிடுகிறோம். இதையும் அழித்தால் நாங்கள் என்ன தான் செய்வோம் என்று ஆதங்கமாக பேசி இருந்தார். அந்த வீடியோவை பார்த்து தான் தளபதி பரந்தூருக்கு வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்
தவெக பொருளாளருக்கு அனுமதி மறுப்பு.., தடுத்து நிறுத்திய காவல்துறை.., ரணகளமாகும் பரந்தூர்!!
கேரள ஷரோன் ராஜ் கொலை வழக்கு விவகாரம்.., குற்றவாளி கிரீஷ்மாவுக்கு தூக்கு தண்டனை!!
தமிழ்நாட்டில் நாளை (21.01.2025) மின்தடை பகுதிகள்! மின்சாரத்துறை அதிகாரபூர்வ அறிவிப்பு!
ஐதராபாத் மெட்ரோ நிர்வாகம் சாதனை., 13 கி.மீ. தொலைவை வெறும் 13 நிமிடத்தில் கடந்த இதயம்!!
தவெக தலைவர் விஜய் ஜனவரி 20ம் தேதி பரந்தூர் செல்கிறார்.., அனுமதி வழங்கிய காவல்துறை!!