தவெக கட்சியினர் சென்னை ஏழை பெண்ணுக்கு தளபதி தேநீர் விடுதி வைத்து கொடுத்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது.
TVK விஜய்:
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் ஆரம்பித்ததில் இருந்து தொடர்ந்து அரசியலில் அதிரடி காட்டி வருகிறார். மேலும் 2026 சட்டமன்ற தேர்தல் தான் நம்முடைய இலக்கு என்று தவெக கட்சியினர் செயல்பட்டு வருகின்றனர். அதுமட்டுமின்றி சென்னையில் மக்கள் மழையில் தத்தளித்து வரும் நிலையில் தவெக கட்சியினர் தொடர்ந்து களத்தில் இறங்கி போராடி வருகின்றனர்.
ஏழை பெண்ணுக்கு தளபதி தேநீர் விடுதி – தொடங்கி டீ போட்டு கொடுத்த TVK புஸ்ஸி ஆனந்த்!!
கட்சியில் உள்ள தொண்டர்கள் பல்வேறு சமூக சேவை செய்து வருகின்றனர் என்பதோடு, குறிப்பாக ஏழை எளிய மக்கள் கேட்கும் உதவிகளை செய்து வருகிறார்கள் என்பதையும் பார்த்து வருகிறார்கள். அந்த வகையில் தற்போது, சென்னையைச் சேர்ந்த ஏழைப் பெண் ஒருவர் தன்னுடைய வாழ்வாதாரத்திற்கு உதவி செய்ய வேண்டும் என்று தவெகவினரிடம் கோரிக்கை விடுத்திருந்தனர். இதையடுத்து, தமிழக வெற்றி கழகத்தின் தொண்டர்கள் நிதி திரட்டி அந்த பெண்ணுக்கு தேநீர் கடை வைத்துள்ளனர்.
திருவண்ணாமலை மகா தீபம் 2024 – மலையேற பக்தர்களுக்கு அனுமதி இல்லை – அமைச்சர் சேகர்பாபு அதிரடி அறிவிப்பு!
இந்த டீக்கடையை தமிழக வெற்றி கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அவர்கள் திறந்து வைத்தார். அதுமட்டுமின்றி, புஸ்ஸி ஆனந்த் நேரில் வந்து அவரே பால் ஆற்றி டீ தயாரித்து விற்பனையை தொடங்கி வைத்ததோடு, இந்த தொழில் மென்மேலும் வளர வேண்டும் என அவர் வாழ்த்து தெரிவித்தார். இதனை அடுத்து, அந்த பெண் தமிழக வெற்றி கழகத்தின் தொண்டர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். அப்போது எடுக்கப்பட்ட வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்
போக்குவரத்து மருத்துவ காப்பீட்டு திட்டம் – 60 லட்சம் ரூபாய் வரை காப்பீடு – அரசு அசத்தல் அறிவிப்பு!
தமிழகத்தில் பைக் டாக்ஸிக்கு தடை? – தமிழக அரசு அதிரடி உத்தரவு!!
ஆருத்ரா தரிசனம் 2025: ஜனவரி 13 உள்ளூர் விடுமுறை – எந்த மாவட்டத்திற்கு தெரியுமா?
தமிழகத்தில் நாளை (12.12.2024) மின்தடை பகுதிகள் – அனைத்து மாவட்டங்களின் முழுமையான விவரம் !