கோலிவுட் கிங் விஜய் நடிக்கும் கடைசி படமான தளபதி 69 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாக இருப்பதாக இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது.
தளபதி 69:
நடிகர் விஜய் தற்போது அரசியல் கட்சி தொடங்கி முழு நேர அரசியலில் ஈடுபட போவதாக ஏற்கனவே அறிவித்துவிட்டார். அவர் கடைசியாக தளபதி 69 படத்தில் நடித்து வருகிறார். இது அவரின் கடைசி படம் என்பதால் ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு பல மடங்கு அதிகரித்து இருக்கிறது.
இதில் ஹீரோயினாக பூஜா ஹெக்டே நடிக்க, அனிமல் பட புகழ் பாபி தியோல், மமிதா பைஜூ மற்றும் கவுதம் மேனன், பிரகாஷ் ராஜ், பிரியாமணி ஆகியோர் சேர்ந்து நடித்து வருகிறார். அனிருத் இசையமைக்கும் இந்த படத்தின் ஷூட்டிங் சென்னையில் செட் அமைக்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தளபதி 69 படம் குறித்து தற்போது ஒரு அதிரடி அப்டேட் வெளியாகி உள்ளது.
தளபதி 69 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்? … ரசிகர்களுக்கு காத்திருக்கும் Mass ட்ரீட்!
சாச்சனாவை காப்பாற்றிய விஜய் சேதுபதி – சிவக்குமார் எலிமினேஷன் அநியாயம்! – மனைவி சுஜா வருணி ஆதங்கம்!
அதாவது நடிகர் விஜய் நடிக்கும் தளபதி 69 படத்தின் First Look போஸ்டர் புத்தாண்டு அறிவிப்பாக வெளியாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் அரசியல் தொடர்பான கிரைம் திரில்லர் கதைக்களத்தில் இந்த படம் உருவாகி வருவதாக கூறப்படுகிறது. எனவே இந்த படம் விஜய்யின் அரசியல் வாழ்க்கையை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்