இந்த உலகில் எத்தனையோ ஆச்சரியமான விஷயங்கள் இருக்கிறது. 3 மைல் தூரம் கடந்தால் போதும் நீங்கள் 21 மணி நேரம் (hours) பின்னாடி போகலாம் என்று சொன்னால் நம்ம முடிகிறதா. அப்படி ஒரு அதிசய தீவுகளை பற்றி நீங்கள் கேள்வி பட்டு உள்ளீர்களா. அதாவது, பெரிங் ஜலசந்தியின் நடுவில், அலாஸ்கா மற்றும் சைபீரியாவின் பிரதான நிலப்பகுதிக்கு இடையில் அமைந்துள்ள தீவு தான், நேற்று மற்றும் நாளை தீவுகள்.
3 மைல் தூரம் கடந்தால் 21 hours பின்னாடி போகலாம் – ஒரு வேலை Time Travel சாத்தியமா இருக்குமோ?
இந்த தீவுகளுக்கு, பிக் டியோமெட் மற்றும் தி லிட்டில் டியோமெட் என இன்னொரு பெயரும் உண்டு. மேலும் லிட்டில் டியோமெட் அமெரிக்காவால் நிர்வகிக்கப்படுகிறது. அதே போல், பிக் டியோமெட் ரஷ்ய கூட்டமைப்பு நிர்வகிக்கப்படுகிறது. இதில் என்ன சுவாரஸ்யம் இருக்கிறது என்று நீங்கள் கேட்கலாம். சுவாரஸ்யம் இருக்கு. இந்த இரண்டு தீவுகளுக்கு இடையே 3.8 கிமீ தொலைவு தான் உள்ளது.
விஜய் கட்சிக்கு மறைமுகமாக ஆதரவு செய்யும் அஜித்? இது நம்ம லிஸ்டிலேயே இல்லையே!!
இங்கு 21 மணி நேரம் வித்தியாசம் இருக்கிறது. இது என்ன வித்திரமா? என்று நீங்கள் கேட்கலாம். அமெரிக்க-ரஷ்ய கடல் எல்லை மற்றும் இந்த தீவுகளுக்கு இடையே செல்லும் சர்வதேச தேதிக் கோடு காரணமாக இருக்கிறது. பிக் டையோமெட் லிட்டில் டையோமெட்டை விட கிட்டத்தட்ட ஒரு நாள் முன்னால் இருக்கிறது. எனவே, லிட்டில் டியோமெட் நேற்று தீவு என்றும் மற்றொன்று நாளைய தீவு என்றும் குறிப்பிடப்படுகிறது.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்