தட்டெழுத்து – சுருக்கெழுத்து தேர்வு 2025 மாதிரி வினாத்தாளை வெளியிட தமிழ்நாடு தட்டெழுத்து மற்றும் சுருக்கெழுத்து பயிற்சி பள்ளிகளின் தலைவர் சோம.சங்கர் முதல்வரிடம் கோரிக்கை.
தட்டெழுத்து – சுருக்கெழுத்து தேர்வு 2025
தமிழ்நாடு தொழில்நுட்ப இயக்கத்தின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் வணிகவியல் எனப்படும் டைப்ரைட்டிங் தொழில்நுட்ப பயிற்சி, அதாவது தட்டெழுத்து, சுருக்கெழுத்து உள்ளிட்டவைகளை கற்க மாநிலம் முழுவதும் சுமார் 4500 பயிற்சி மையங்கள் இயங்கி வருகிறது. typewriting and shorthand exam 2025
மேலும் இது தொடர்பான தேர்வு 6 மாதத்திற்கு ஒரு முறை நடைபெற்று வருகிறது. இதனை தொடர்ந்து வணிகவியல் பாடத்திட்டத்திற்கு கடந்த பல வருடங்களாக ஒரே பாடத் திட்டம் கடைபிடிக்கப்பட்டு வந்த நிலையில், புதிய பாடத்திட்டதிற்கான அறிவிப்பை கடந்த ஜூலை 31 ம் தேதி தொழில்நுட்ப கல்வி இயக்க ஆணையர் வெளியீட்டு இருந்தார்.
Also Read: புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை – 1 கிராம் 7000 ரூபாயா? இல்லத்தரசிகள் ஷாக்!
ஆனால் இப்பொழுது வரை புதிய பாடத்திட்டம் வெளியாகாமல் இருந்து வந்த நிலையில், மாணவர்கள் பழைய பாடத்திட்டத்தை கற்பித்து வருகின்றனர். அதுமட்டுமின்றி அடுத்தஆண்டு பிப்ரவரியில் வணிகவியல் மற்றும் சுருக்கெழுத்து தேர்வு நடைபெற இருப்பதால், மாணவர்களின் நலன் கருதி இது குறித்து விரைவில் முடிவு எடுக்கப்பட வேண்டும். எனவே மாதிரி வினா படிவத்தை வெளியிட வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலினிடம் கோரிக்கை வைத்துள்ளார்.
குழந்தைகளின் ஆபாசப் படங்களை பார்ப்பது குற்றம்
சேலம் – தஞ்சாவூரில் டைடல் நியோ பார்க்
இனி பிரசாதம் தயாரிக்க இந்த நெய்தான் – அரசு போட்ட அதிரடி உத்தரவு!
கல்யாணத்திற்கு பிறகு வீட்டோட மாப்பிள்ளையாக செல்லும் ஆண்கள்?