
உதகை மலை ரயில் சேவை இன்று தொடக்கம்: கோவை மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பாளையத்தில் இருந்து தினசரி நீலகிரி மாவட்டம் உதகைக்கு மலை ரயில் ஒன்று இயக்கப்பட்டு வருகிறது. மற்ற ரயில் பாதைகளை காட்டிலும், இந்த மலை ரயில் அடர்ந்த காட்டுக்குள்ளேயும், மலை முகடுகளுக்கு மத்தியிலும் செல்வதால் இயற்கை அழகை நம் கண் முன்னால் பார்க்க முடியும். அதை கண்டுகளிக்கவே பெரும்பாலான கூட்டம் அலைமோதும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கடந்த நான்கு நாட்களுக்கு முன்னர் தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக கல்லார் மற்றும் ஹில்கிரோ உள்ளிட்ட பகுதிகளில் மண் சரிவு ஏற்பட்டு தண்டவாளங்கள் மூடப்பட்டது.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
இதனால் மலை ரயில் கிட்டத்தட்ட நான்கு நாட்களாக தடை செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் சுற்றுலா பயணிகளுக்கு ஒரு சூப்பர் நியூஸ் வெளியாகியுள்ளது. அதாவது மேட்டுப்பாளையம் – உதகை மலை ரயில் சேவை இன்று முதல் மீண்டும் தொடங்கியுள்ளது. இன்று காலை காலை 7.10 மணிக்கு மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகைக்கு மலை ரயில் புறப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் நான்கு நாட்களுக்கு பிறகு ரயில் சேவை தொடங்கி இருப்பதால் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. உதகை மலை ரயில் சேவை இன்று தொடக்கம் – udhagai hill train – Nilgiri mountain train and Mettupalayam to Ooty Trains news
விஜய் டிவி பிரியங்கா 2வது திருமணம்? – மாப்பிள்ளை யார் தெரியுமா? வெளியான ஷாக்கிங் தகவல்!!
சமீபத்திய செய்திகள் – இதையும் மறக்கமாக படிங்க
எம்.எஸ். தோனி வாங்கிய கோப்பைகளின் வயது என்ன தெரியுமா?
“நான் மீசை வச்ச குழந்தையப்பா” என்ற வரியில் குழந்தையா இது?