மாநில திட்டக்குழு – வின் துணைத் தலைவராக உதயநிதி ஸ்டாலினை நியமனம் செய்துள்ளதாக தமிழக அரசு உத்தரவை பிறப்பித்துள்ளது.
திட்டக்குழு துணைத் தலைவராக உதயநிதி நியமனம் – தமிழக அரசு அதிரடி உத்தரவு!
தமிழகத்தில் திமுக கட்சி ஆட்சியை பிடித்ததில் இருந்து தொடர்ந்து பல்வேறு திட்டங்களை வகுத்து வருகிறது. சமீபத்தில் விளையாட்டு துறை அமைச்சராக இருந்து வந்த உதயநிதி துணை முதல்வராக பதவியேற்றார். அதுமட்டுமின்றி தொடர்ந்து களத்தில் இறங்கி வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் துணை முதல்வர் உதயநிதி அவர்களுக்கு புதிய பதவி கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது தமிழக அரசின் மாநில திட்டக்குழுவின் தலைவராக முதல்வர் மு.க. ஸ்டாலின் இருந்து வருகிறார். அவருக்கு துணைத் தலைவராக ஜெயரஞ்சன் மற்றும் இதர உறுப்பினர்கள் இருந்து வருகின்றனர். இப்படி இருக்கையில், உதயநிதி ஸ்டாலின், திட்டக்குழுவின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். அதன்படி, திட்டம், வளர்ச்சி, சிறப்பு முயற்சிகள் துறையின் அமைச்சர் என்ற முறையில் உதயநிதி அலுவல் சாரா துணைத் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழக அரசு வழங்கும் ரூ.2000 வெள்ள நிவாரணம் – டோக்கன் எப்போது? வெளியான முக்கிய தகவல்!
அதே போல் இதற்கு முன்னர் துணைத் தலைவராக இருந்த ஜெயரஞ்சன் தற்போது செயல் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். அதுமட்டுமின்றி, தமிழக தலைமைச் செயலாளர் நா.முருகானந்தம் அலுவல் சாரா உறுப்பினராகவும் நியமனம் செய்துள்ளார். மேலும் இரு முழு நேர உறுப்பினர்களும், 7 பகுதி நேர உறுப்பினர்களும் இருக்கின்றனர்.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்