இந்திய கல்லூரி பல்கலைக்கழகங்களை நிர்வகிக்கும் பல்கலைக்கழக ஆணையக் குழு UG பட்டப்படிப்பை இனி 2 வருடத்தில் முடிக்கலாம் என்ற புதிய முறையை தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது.
கல்லூரி மாணவர்களுக்கு ஹாப்பி நியூஸ் – இனி UG பட்டப்படிப்பை 2 வருடத்தில் முடிக்கலாம் – UGC அறிவிப்பு!
இந்தியாவில் இருக்கும் பொறியியல் கல்லூரிகள், கலை – அறிவியல் கல்லூரிகளை இயக்கும் பல்கலைக்கழகங்கள் மற்றும் தன்னாட்சி அனுமதி பெற்ற பல்கலைக்கழகங்கள் என அனைத்து, மத்திய அரசின் பல்கலைக்கழக ஆணையக் குழுவின் விதிமுறைகளின் கீழ் தான் இயங்கி வருகிறது என்பதை நாம் அறிவோம்.
இதனை தொடர்ந்து வரும் கல்வியாண்டில், யுஜிசி(University Grant Commission) பட்டப்படிப்பில் புதிய முறையை திட்டமிட்டுள்ளது. அதாவது, இளங்கலை பிரிவுகளில் படிக்கும் மாணவர்கள் தங்களது கல்வியை ஒரு ஆண்டு முன்னதாகவே படித்து முடித்துக் கொள்ளும் முறை அறிமுகப்படுத்தப்பட உள்ளது. தெளிவாக சொல்ல போனால் மூன்று வருடம் இருக்கும் கல்லூரி காலம் இரண்டு வருடங்களில் முடித்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளது.
ஹெல்மெட் மாற்றி நிச்சயதார்த்தம் செய்த ஜோடி? அடடே இப்படி ஒரு காரணமா?
இதன் மூலம் மூன்றாவது வருட படிப்புக்கான பாடங்களை இரண்டு வருடத்தில் படித்து முடித்திருக்க வேண்டும். மேலும் இது குறித்து மாணவர்களின் தகுதியை மதிப்பிட உயர்கல்வி நிறுவனங்கள் ஒரு குழுவை அமைத்து மதிப்பாய்வு செய்யப்பட்டு அடுத்த கல்வியாண்டு முதல் இந்த முறை கொண்டு வரப்படும் என்று தெரிவித்துள்ளது.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்