UG NEET Exam 2024 : இளநிலை நீட் கவுன்சிலிங் ஒத்திவைப்பு: கடந்த சில வருடங்களாக இந்தியா முழுவதும் மருத்துவ நுழைவுத் தேர்வான நீட்(NEET)1 தேர்வு நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நடப்பாண்டு நீட் தேர்வு மே மாதம் 5ம் தேதி நடந்தது.மேலும் அந்த தேர்வில் முறைகேடு நடந்ததாக கூறி மாணவர்கள் அந்த தேர்வை ரத்து செய்ய கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இளநிலை நீட் கவுன்சிலிங் ஒத்திவைப்பு
அதுமட்டுமின்றி அரசியல் கட்சியினர் நீட் விலக்கு வேண்டி குரல் கொடுத்து வருகின்றனர். 67 பேர் 720 க்கு 720 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தை பிடித்தது மற்றும் கருணை மதிப்பெண் என இம்முறை பல்வேறு சர்ச்சைகளை எழுந்தன. இந்த விவகாரத்தால் PG நீட் தேர்வு தேதி ஒத்திவைக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் கலந்தாய்வு குறித்த விவரங்கள் இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் தற்போது கலந்தாய்வு தேதி குறிப்பிடாமல் இளநிலை நீட் கவுன்சிலிங்கை ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
Also Read: அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தம் – என்ன காரணம் தெரியுமா? – வெளியான முக்கிய தகவல்!
சமீபத்தில் நடந்த நீட் தேர்வு தொடர்பான முக்கிய வழக்கு வரும் ஜூலை 8ம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வர இருக்கிறது. இதனால் கலந்தாய்வு குறித்து அறிவிப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை செம்மொழி பூங்காவில் உணவுத் திருவிழா
பாம்பன் பேருந்து நிலையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்
என்னது பலூனுக்குள்ள தியேட்டரா? – தமிழகத்தில் எங்கு உள்ளது தெரியுமா?
உதகை குதிரை பந்தய மைதானம் மீட்பு
- Neet exam 2024 latest news ↩︎