யுஜிசி நெட் தேர்வு 2024…  புதிய தேதியை அறிவித்தது என்டிஏ - மாணவர்களே ரெடியாகி கோங்க!யுஜிசி நெட் தேர்வு 2024…  புதிய தேதியை அறிவித்தது என்டிஏ - மாணவர்களே ரெடியாகி கோங்க!

யுஜிசி நெட் தேர்வு 2024: சமீப காலமாக அரசாங்கம் நடத்தும் தேர்வுகளில் வினாத்தாள் கசிவு போன்ற புகார்கள் எழுந்த வண்ணம் இருக்கிறது. நீட் தேர்வு தேர்வு முதல் யுஜிசி நெட் தேர்வு வரை இது மாதிரியான குளறுபடிகள் நடைபெற்றுள்ளது. அதாவது கடந்த ஜூன் 18ம் தேதி நடந்த யுஜிசி நெட் தேர்வில்  வினாத்தாள் கசிந்ததாக புகார் எழுந்தது.

இதனால் இந்த தேர்வை ரத்து செய்து  தேசிய தேர்வு முகமை மற்றும் மத்திய கல்வித்துறை அமைச்சகம் தெரிவித்தது. இதனை தொடர்ந்து அடுத்து யுஜிசி நெட் தேர்வு எப்போது நடைபெறும் என்று மாணவர்கள் எதிர் பார்த்து காத்து கொண்டிருந்த நிலையில் தற்போது முக்கியமான அறிவிப்பு வெளியாகியுள்ளது. National Examinations Agency

அதாவது யுஜிசி நெட் தேர்வு வருகிற ஆகஸ்ட் 21ம் தேதி முதல் செப்டம்பர் 4 வரை நடைபெற இருப்பதாக தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. அதன்படி காலை 9 மணி முதல் நண்பகல் 12 மணி வரையிலும் மதியம் 3 மணி முதல் மாலை 6 மணி வரையிலும் என 2 பிரிவுகளாக நடைபெற இருக்கிறது.

Also Read: வயநாட்டில் 4 பேர் உயிருடன் மீட்ட ராணுவ வீரர்கள் – நான்கு நாட்களுக்கு பிறகு வந்த மகிழ்ச்சியான செய்தி!

மேலும் தேர்வு நடக்கும் மையம் தொடர்பாக, இணையதளத்தில் வெளியிடப்படும். இது தொடர்பான தகவல்களுக்கு என்டிஏ இணையதளத்தை பார்த்து தெரிந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதனை தொடர்ந்து மாணவர்கள் தேர்விற்காக தங்களை தயார் படுத்தி வருகின்றனர். ugc net exam 2024

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *