UGC NET Exam 2024: யுஜிசி நெட் தேர்வு ஒத்திவைப்பு: இந்தியாவில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் மற்றும் பல்கலைக்கழகங்களிலும் இருக்கும் அரசு உதவி உதவிப் பேராசிரியருக்கான காலி பணியிடங்களை நிரப்புவதற்கு நெட் தேர்வை யுஜிசி நடத்தி வருகிறது. மேலும் யுஜிசி சமீபத்தில் பி எச்.டி. மாணவர் சேர்க்கைக்கும் இனி நெட் தேர்வு வைக்கப்படும் என அறிவித்திருந்தது. மேலும் இந்த தேர்வு NTA எனப்படும் தேசியத் தேர்வுகள் முகமையால் நடத்தப்படுகிறது. இந்த தேர்வு ஆண்டுதோறும் 2 முறை கணினி முறையில் நடத்தப்படுகிறது.
UGC NET 2024: யுஜிசி நெட் தேர்வு ஒத்திவைப்பு
அந்த வகையில் நடப்பாண்டுக்கான தேர்வு வருகிற ஜூன் மாதம் 16 ஆம் தேதி நடைபெற இருப்பதாக யுஜிசி தெரிவித்தது. இந்நிலையில் தேர்வுக்கான தேதியை மாற்றியுள்ளதாக யுஜிசி தலைவர் ஜெகதீஷ் குமார் தெரிவித்துள்ளார். அதாவது, வருகிற ஜூன் 16ம் தேதி நெட் தேர்வு நடைபெறும் என்று அறிவிப்பு வெளியான நிலையில், அன்று இந்திய ஆட்சிப் பணி, இந்திய காவல் பணி உள்ளிட்ட குடிமைப் பணியிடங்களுக்காக (UPSC) மத்திய பணியாளர் தேர்வாணையம் நடத்தும் முதல் நிலைத் தேர்வு நடைபெற இருக்கிறது.
பாஜக எம் பி வி.ஸ்ரீநிவாஸ் பிரசாத் காலமானார் – பொது விடுமுறை அறிவித்த கர்நாடக அரசு!
இதனால் அன்று நடக்க இருந்த நெட் தேர்வு ஜூன் 18ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என யுஜிசி தலைவர் ஜெகதீஷ் குமார் தெரிவித்துள்ளார். மேலும் விவரங்களுக்கு http://www.nta.ac.in , ugcnet@nta.ac.in என்ற இணையதள முகவரியை தொடர்பு கொள்ளலாம். அதுமட்டுமின்றி தேர்வர்கள் 011 40759000 என்ற எண்ணை தொடர்பு கொண்டு தங்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை தீர்த்துக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!