Home » செய்திகள் » UGC NET மறுதேர்வு தேதிகள் 2024 – தேசிய தேர்வு முகமை அறிவிப்பு !

UGC NET மறுதேர்வு தேதிகள் 2024 – தேசிய தேர்வு முகமை அறிவிப்பு !

UGC NET மறுதேர்வு தேதிகள் 2024 - தேசிய தேர்வு முகமை அறிவிப்பு !

கடந்த சில நாட்களுக்கு முன்பாக ஒத்திவைக்கப்பட்ட UGC NET மறுதேர்வு தேதிகள் 2024, இதனை தொடர்ந்து முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தேசிய தேர்வு முகமை.

இந்தியாவில் உள்ள பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளில் உதவி பேராசிரியராக பணியாற்றவும், மேலும் இளநிலை ஆராய்ச்சி படிப்புக்கான மத்திய அரசின் உதவித் தொகையைப் பெறவும் யு.ஜி.சி நெட்(UGC NET) தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம். அந்த வகையில் ஆண்டுதோறும் தேசிய தேர்வுகள் முகமை(என்.டி.ஏ) சார்பில் இரண்டுமுறை நெட் தேர்வு நடைபெறுகிறது.

இதனை தொடர்ந்து இந்தாண்டுக்கான நெட் தேர்வு முதற்கட்டமாக கடந்த ஜூன் மாதம் நடைபெற்றது.இந்த தேர்வை 9 லட்சத்திற்கும் மேற்பட்டோர் எழுதிய நிலையில், இந்த நெட் தேர்வை ரத்து செய்து மத்திய கல்வி அமைச்சகம் உத்தரவிட்டது. அந்த வகையில் தேர்வு முறையில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யும் நோக்கில் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அத்துடன் கடந்த 25 முதல் 27 வரை நடக்கவிருந்த சி.எஸ்.ஐ.ஆர் யுஜிசி நெட்(CSIR UGC NET) தேர்வு ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மதுரை – பெங்களூரு வந்தே பாரத் எப்போது ? வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ரயில்வே நிர்வாகம் !

இந்த நிலையில் யு.ஜி.சி நெட் மற்றும் சி.எஸ்.ஐ.ஆர் யுஜிசி நெட் ஆகிய தேர்வு நடைபெறும் தேதிகளை தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. அந்த வகையில் இது தொடர்பாகத் தேசிய தேர்வுகள் முகமை வெளியிட்டுள்ள அறிக்கையில், யு.ஜி.சி நெட் தேர்வு வரும் ஆகஸ்ட் மாதம் 21 மற்றும் செப்டம்பர் 4 தேதிகளுக்கிடையே நடைபெறும் என்றும் சி.எஸ்.ஐ.ஆர் யுஜிசி நெட் தேர்வு வரும் ஜூலை மாதம் 25 ஆம் தேதி முதல் 27 ஆம் தேதி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top