இந்திய அரசின் தனித்துவ அடையாளமான UIDAI ஆதார் ஆணையத்தில் Consultant வேலைவாய்ப்பு 2024. , டெல்லி, பெங்களூரு உள்ளிட்ட இடங்களில் உள்ள அலுவலகங்களில் வெவ்வேறு ஆலோசகர் பணிக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. காலிப்பணியிடங்கள் தகுதி, சம்பளம், விண்ணப்பிக்கும் முறை மற்றும் பிற தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
UIDAI ஆதார் ஆணையத்தில் Consultant வேலைவாய்ப்பு 2024
நிறுவனம் | ஆதார் துறை |
வேலை பிரிவு | மத்திய அரசு வேலை |
பணியிடங்களின் எண்ணிக்கை | 10 |
எப்படி விண்ணப்பிப்பது | தபால் |
அதிகாரப்பூர்வ இணையதளம் | uidai.gov.in |
தொடக்க நாள் | 10.06.2024 |
கடைசி நாள் | 10.07.2024 |
வகை:
அரசு வேலை
ஆணையம்:
இந்திய தனித்துவ அடையாள ஆணையம்
பணிபுரியும் இடம்:
டெல்லி, பெங்களூர், மனேசர்
காலிப்பணியிடங்கள் விபரம்;
துணை இயக்குனராக ஆலோசகர் தொழில்நுட்பம் – 2
(Consultant as Deputy Director Technology)
தொழில்நுட்ப அதிகாரியாக ஆலோசகர் – 8
(Consultant as Technical Officer)
மொத்த காலியிடங்கள் – 10
கல்வித்தகுதி:
பொறியியல் அல்லது தொழில்நுட்பம் சார்ந்த துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றிருக்கவேண்டும்.
அனுபவம்:
விண்ணப்பதாரர்கள் மத்திய அல்லது மாநில அரசு /பொதுத்துறை நிறுவனங்கள் / தன்னாட்சி அல்லது சட்டப்பூர்வ அமைப்புகள்/ பொதுத்துறை வங்கி ஏதேனும் ஒன்றில் குறிப்பிட்ட ஊதிய நிலையில் பதவிக்கு தேவையான துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற அதிகாரியாக இருக்கவேண்டும்.
இதரத்தகுதி:
விண்ணப்பதாரர்களுக்கு ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழி சரளமாக தெரிந்திருக்கவேண்டும்.
வயது வரம்பு:
விண்ணப்பதாரர்கள் 63 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
NTPC தேசிய அனல் மின் கழகம் வேலைவாய்ப்பு 2024 ! Assistant Officer காலிப்பணியிடங்கள் அறிவிப்பு !
சம்பளம்:
துணை இயக்குனராக ஆலோசகர் தொழில்நுட்பம் – ரூ.75,000/-
தொழில்நுட்ப அதிகாரியாக ஆலோசகர் – ரூ.50,000/-
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பிக்க விரும்பும் தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் கொடுக்கப்பட்டுள்ள படிவத்தின் படி விண்ணப்பபடிவம் பூர்த்தி செய்து,
வயது சான்றிதழ்
கல்வித்தகுதி சான்று
அனுபவச் சான்று
ஆகிய ஆவணங்கள் இனைத்து தபால் அல்லது அஞ்சல் மூலம் அனுப்பி விண்ணப்பிக்கவேண்டும்.
விண்ணப்பிக்கவேண்டிய முகவரி:
இயக்குனர் (HR),
இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI),
4வது தளம்,பங்களா சாஹிப் சாலை,
காளி மந்திர் பின்புறம், கோல் மார்க்கெட்,
புது தில்லி – 110 001.
விண்ணப்பிக்கும் தேதி:
ஜூன் 10 முதல் ஜூலை 10 வரை இப்பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம். (10.06.2024 – 10.07.2024)
தேர்ந்தெடுக்கும் முறை:
அரசு விதிமுறைகளின் படி நேர்காணல் மற்றும் சோதனைகள் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் தகுதியான நபர்கள்.
அதிகாரபூர்வ அறிவிப்பு | Click here |
விண்ணப்ப படிவம் | Download |
அதிகாரபூர்வ இணையதளம் | View |
எம்பிளாய்மெண்ட் நியூஸ் தமிழ் | Click here |
மேலும் விபரங்களுக்கு UIDAI இணையதளம் அல்லது அதிகார பூர்வ அறிவிப்பை காணலாம்.