
Breaking News: உக்ரைன் மருத்துவமனை மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல்: கடந்த சில மாதங்களாக உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதை எதிர்த்து பல நாடுகள் கருத்து தெரிவித்த போதிலும் ரஷ்யா செவி சாய்க்காமல் இருந்து வருகிறது. இந்த தாக்குதலில் பெரும்பாலான மக்கள் உயிரிழந்தனர்.
உக்ரைன் மருத்துவமனை மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல்
இப்படி இருக்கையில் நேற்று ரஷ்யா ராணுவம் உக்ரைன் தலைநகர் கீவில் இருக்கும் பிரதான குழந்தைகள் மருத்துவமனையில் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது உக்ரைனில் இருக்கும் இந்த மிகப்பெரிய குழந்தைகள் மருத்துவமனையில் அதிகமாக நோய்வாய்ப்பட்ட குழந்தைகள் தீவிர சிகிச்சையில் இருந்து வந்தனர்.
இந்நிலையில் நேற்று ரஷ்யா யாரும் எதிர்பார்க்காத தருணத்தில் தாக்குதலை நடத்திய போது தங்களின் குழந்தைகளை கையில் ஏந்தியபடி தாய்மார்கள் வெளியே ஓடி வந்தனர். இந்த கொடூரமான தாக்குதலில் குழந்தைகள் உட்பட 27 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் 87 படுகாயமடைந்துள்ளனர் என்று உக்ரைனின் ராணுவம் தெரிவித்துள்ளது.
Also Read: சிவகாசி அருகே உள்ள பட்டாசு ஆலையில் தீ விபத்து – இரண்டு பேர் உயிரிழப்பு!
அதே போல் இந்த மருத்துவமனை மட்டுமின்றி உக்ரைனின் பல்வேறு பகுதிகளில் ரஷ்யா ராணுவம் ஏவுகணை தாக்குதலை நடத்தி உள்ளது. இதில் பொதுமக்கள் 41 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 170 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர் என்று உக்ரைனின் ராணுவம் கூறியுள்ளது. இந்த சம்பவம் உலகத்தையே உலுக்கி கொண்டிருக்கிறது.
25 பைசா தான் வேணும் – வங்கியில் அடம்பிடித்த நபர்
தமிழகத்தில் தோழி விடுதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க திட்டம்