உலகநாயகன் கமல்ஹாசன் 'தக் லைஃப்' திரைப்படத்தின் புதிய அப்டேட் - படத்தில் இணைந்த முக்கிய பிரபலங்கள் !உலகநாயகன் கமல்ஹாசன் 'தக் லைஃப்' திரைப்படத்தின் புதிய அப்டேட் - படத்தில் இணைந்த முக்கிய பிரபலங்கள் !

உலகநாயகன் கமல்ஹாசன் ‘தக் லைஃப்’ திரைப்படத்தின் புதிய அப்டேட், நடிகர் நாசர் மற்றும் நடிகை அபிராமி இந்த திரைப்படத்தில் இணைந்துள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

தமிழ் சினிமாவின் இரண்டு ஜாம்பவான்களான இயக்குனர் மணிரத்னம் மற்றும் உலகநாயகன் கமல்ஹாசன் இருவரும் சூப்பர் ஹிட் படமான நாயகன் படத்திற்கு பிறகு 33 ஆண்டுகள் கழித்து மீண்டும் இணைந்துள்ள திரைப்படம் ‘தக் லைஃப்’. இந்த திரைப்படத்தை கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், மணிரத்தினத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர்.

THUG LIFE படத்தில் திரிஷா, ஐஸ்வர்யா லக்ஷ்மி, ஜோஜூ ஜார்ஜ், சிம்பு உள்ளிட்டோர் நடித்து வருகிறார்கள். மேலும் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இப்படத்துக்கு இசையமைக்கிறார்.

இதனையடுத்து ‘தக் லைஃப்’ படத்தின் படப்பிடிப்பானது சென்னை மற்றும் டெல்லி போன்ற நகரங்களில் நடைபெற்று வந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் சில நாட்களுக்கு முன்பு டப்பிங் பணிகளும் தொடங்கப்பட்டதாக தகவல் வெளியாகின.

சினிமாவில் இருந்து வேறு துறைக்கு போகும் சினேகன் – திடீர் முடிவால் ரசிகர்கள் அதிர்ச்சி!!

இதனையடுத்து ‘தக் லைஃப்’ திரைப்படத்தில் நடிகர் நாசர் மற்றும் நடிகை அபிராமி இணைய இருப்பதாக சில நாட்களுக்கு முன்பு தகவல்கள் கசிந்தன.

தற்போது அதனை உறுதிப்படுத்தும் வகையில் அதிகாரபூர்வமான போஸ்டரை படக்குழு வெளியிட்டு அவர்கள் இருவரும் படப்பிடிப்பில் இணைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

நடிகர் நாசர் மற்றும் உலகநாயகன் கமல்ஹாசன் கூட்டணியில் ஏராளமான படங்கள் வெளியாகியுள்ளன. இவர்கள் இரண்டு பேருக்கும் இடையே இருக்கும் கெமிஸ்ட்ரி என்றுமே ரசிகர்களின் பேவரட்டாக இருந்து வருகிறது.

நடிகை அபிராமி ஏற்கனவே 2004ம் ஆண்டு வெளியான ‘விருமாண்டி’ படத்தில் நடிகர் கமல்ஹாசனுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

எனவே இவர்கள் இருவரும் தக் லைஃப் திரைப்படத்தில் இணைந்தது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *