
ரெட் அலர்ட்
தொடர்ந்து பருவநிலை மாற்றம் அடைந்து வருவதால் அடுத்தடுத்த நாட்கள் வானிலை எப்படி இருக்க போகிறது என்பது குறித்து வானிலை ஆய்வு மையம் முன்கூட்டியே தெரிவித்து வருகிறது. ஆனால் தற்போது உலகில் வரலாறு காணாத வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இந்த வருடம் காணப்படுகிறது. சொல்லப்போனால் சில பகுதிகளில் 1.48 டிகிரி செல்சியஸ் அளவுக்கு அதிகரித்துள்ளது.

உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
இந்நிலையில் ஐக்கிய நாடுகள் சபையின் வானிலை ஏஜென்சி ஒட்டுமொத்த உலகிற்கு ரெட் அலர்ட் கொடுத்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருந்து வருவதால் அண்டார்டிக், ஆர்ட்டிக் உள்ளிட்ட கடல் பகுதிகளில் மிகப்பெரிய பனிப் பாறைகள் உருவாக தொடங்கியுள்ளன. இதனால் கடல் நீர் மட்டம் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது.
இதன் விளைவாக வெள்ளப்பெருக்கு, கடும் வறட்சி, காட்டுத்தீ, சூறாவளிகள் உள்ளிட்டவைகள் வரலாம். நாம் இப்பொழுது நமது கிரகத்தின் அழிவின் விளிம்பில் நிற்கிறோம். மாற்றங்கள் வேகமாக நடந்து வருகின்றன. எனவே மாற்று சக்தியை நோக்கி நகர்வது அவசியம் என்று ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரஸ் தெரிவித்துள்ளார். இந்த தகவலை கேட்ட மக்கள் சற்று பீதியில் இருந்து வருகின்றனர்.