வேலையில்லா இளைஞர்களுக்கு உதவித்தொகைவேலையில்லா இளைஞர்களுக்கு உதவித்தொகை

  வேலையில்லா இளைஞர்களுக்கு உதவித்தொகை.  தமிழக அரசின் சார்பில் படித்து வேலை இல்லாமல் இருக்கும் இளைஞர்களுக்கு உதவித்தொகையானது அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்க்கு விண்ணப்பிக்கும் முறை குறித்த தகவல்களை காணலாம்.

வேலையில்லா இளைஞர்களுக்கு உதவித்தொகை ! எப்படி விண்ணப்பிக்கலாம்! 

வேலையில்லா இளைஞர்களுக்கு உதவித்தொகை

தமிழக அரசு அறிவிப்பு :

  மாவட்ட வேலைவாய்ப்பு மையம் மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தின் மூலம் படித்து முடித்து விட்டு வேலை இல்லாமல் இருக்கும் அனைத்து இளைஞர்களுக்கும் உதவித்தொகையானது வழங்கப்பட்டு வருகின்றது. 

JOIN SKSPREAD WHATSAPP CHANNEL

கல்வித்தகுதி :

  1. பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள்.     

  2. பத்தாம் வகுப்பு தோல்வி அடைந்தவர்கள்.

  3. பனிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் 

  4. பட்ட படிப்பு படித்தவர்கள் 

  5. பட்டயப்படிப்பு முடித்தவர்கள் 

இவர்கள் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து வேலை ஏதும் இல்லாமல் 5 ஆண்டுகளுக்கு மேல் காத்து இருப்பவர்கள் கிண்டி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி மையத்திற்கு நேரில் சென்று விண்ணப்பிக்கலாம்.

மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கும் முறை :

  விண்ணப்பதாரர்களில் மாற்று திறனாளிகள் என்றால் சென்னை 32 , கிண்டியில் அமைந்திருக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் சென்று விண்ணப்பிக்கலாம்.

வயதுத்தகுதி :

  1. பொதுப்பிரிவினர்கள் – 40 வயதிற்குள் 

  2. ஆதிதிராவிடர் / பழங்குடியினர் – 45 வயதிற்குள் இருக்கும் வேலையில்லாத நபர்கள் விண்ணப்பிக்கலாம். வேலையில்லா இளைஞர்களுக்கு உதவித்தொகை.

லாரிகளில் ஏ.சி கட்டாயம் ! இனி குளு குளுனு ட்ராவல் பண்ணலாம்  !

முக்கிய தகுதிகள் :

  1. குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ. 72,000த்திற்குள் இருக்க வேண்டும். 

  2. தனியார் நிறுவனத்தில் பணி செய்யாதவராகவும் மற்றும் சுய தொழில் செய்யாதவராகவும் இருக்க வேண்டும். 

  3. வேலை வாய்ப்பு அலுவலத்தில் பதிவு செய்து ஐந்து ஆண்டுகள் காத்திருப்பவராகவும் தொடர்ந்து படிவத்தினை புதுப்பித்து வருபவராகவும் இருக்க வேண்டும்.

உதவித்தொகை பெறும் பயனாளர்களின் கவனத்திற்கு :

  வேலைவாய்ப்பு இல்லாமல் உதவித்தொகை வாங்கி பயனடையும் பயனளர்களும் விண்ணப்பம் சமர்ப்பித்து ஒரு ஆண்டுகள் நிறைவடைந்த பயனாளர்கள் சுய உறுதி மொழி ஆவணத்தினை சமர்ப்பிக்க வேண்டும். 

தேவையானவை :

  1. வேலைவாய்ப்பு அலுவலக பதிவு எண் 

  2. உதவித்தொகை எண் ( MR.No )

  3. வங்கி புத்தகம் ஜெராக்ஸ் 

  4. ஆதார் எண் 

இவைகளுடன் அலுவலகத்திற்கு நேரில் சென்று சுய உறுதி மொழி ஆவணத்தினை பயனாளர்கள் சமர்ப்பிக்க வேண்டும்.

OFFICIAL NOTIFICATIONDOWNLOAD 

வேலை இல்லாத இளைஞர்களுக்கு உதவித்தொகை வழங்கும் தகவலை சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தெரிவித்து உள்ளார். மேற்கண்ட தகுதியுடைய வேலையில்லாத அனைவரையும் தமிழக அரசு வழக்கும் திட்டத்தில் பயனடைந்து கொள்ளவும்.  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *