தற்போது தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டானது இது பீகார் மற்றும் ஆந்திராவிற்கான பட்ஜெட் என்று எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்ய தொடங்கியுள்ளனர்.
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
இது பீகார் மற்றும் ஆந்திராவிற்கான பட்ஜெட்
மத்திய பட்ஜெட் :
தற்போது மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2024 – 2025ம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறார். அத்துடன் அவர் தாக்கல் செய்யும் மத்திய பட்ஜெட்டிற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
மேலும் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ராஷ்டிரபதி பவனில் சந்தித்து பட்ஜெட் நகலை குடியரசு தலைவர் திரெளபதி முர்முவிடம் அளித்து ஒப்புதலை பெற்றார்.
இதனையடுத்து பட்ஜெட் உரையை பெற்றுக்கொண்ட குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு இனிப்பு வழங்கி தனது வாழ்த்துகளை தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து காலை 11 மணிக்கு தாக்கல் செய்து தற்போது உரை நிகழ்த்தி வருகிறார். பீகார் மற்றும் ஆந்திராவிற்கு அதிகமான திட்டங்கள் பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ளன.
பீகார் திட்டம் :
தற்போது அறிவிக்கப்பட்டு வரும் மத்திய பட்ஜெட்டில் அமிர்தசரஸ் மற்றும் கொல்கத்தா தொழில் வழித்தடத்தில் பீகாரில் உள்ள கயாவில் தொழில்துறை அனுமதியின் வளர்ச்சிக்கு ஆதரவு அளிக்கப்படும் என்றும்,
மேலும் உள்நாட்டு கல்வி நிறுவனங்களில் உயர்கல்விக்காக ரூ.10 லட்சம் வரையிலான கடனுக்கான நிதியுதவியை அரசு வழங்கும்.
இதனையடுத்து சாலை இணைப்புத் திட்டங்களான பாட்னா – பூர்னியா விரைவுச் சாலை மற்றும் பக்சர் – பாகல்பூர் நெடுஞ்சாலை, போத்கயா – ராஜ்கிர் – வைசாலி – தர்பங்கா மற்றும் பக்சரில் கங்கை ஆற்றின் மீது கூடுதல் இருவழிப் பாலம் போன்றவை மேம்படுத்தப்படும்.
பீகார் அரசின் கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்றும் என்றும், அந்த வகையில் புதிய விமான நிலையங்கள், மருத்துவக் கல்லூரிகள் மற்றும் விளையாட்டு உள்கட்டமைப்புகள் போன்றவை ஏற்படுத்தி தரப்படும்.
இதற்காக பீகார் அரசிற்கு ரூ 26 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
ஆந்திரப் பிரதேச திட்டங்கள் :
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டு வரும் மத்திய பட்ஜெட்டில் ஆந்திரப் பிரதேச மறுசீரமைப்புச் சட்டத்தில் உள்ள உறுதிமொழிகளை நிறைவேற்ற மத்திய அரசு முயற்சிகளை மேற்க்கொள்ளும்,
அதன் பின்னர் மாநிலத்தின் மூலதனத் தேவையை உணர்ந்து பல்வேறு வகையான முகமைகள் மூலம் சிறப்பு நிதி உதவி எளிதாக்கப்படும்.
மேலும் நடப்பு நிதியாண்டில் ரூ.15 ஆயிரம் கோடி கூடுதல் தொகைகளுடன் வரும் ஆண்டுகளில் ஏற்பாடு செய்யப்படும்.
குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான (MSME) காலக் கடன்களை எளிமையாக்க கடன் உத்தரவாதத் திட்டம் தொடங்கப்படும்.
அத்தகைய நிறுவனங்களின் கடன் அபாயங்களை குறைக்க இந்தத் திட்டம் செயல்படும்.
இதனை தொடர்ந்து ஒரு சுயநிதி உத்தரவாத நிதி ஒவ்வொரு விண்ணப்பதாரருக்கும் சுமார் ரூ.100 கோடி வரையிலான காப்பீட்டை வழங்கும், அதே சமயம் கடன் தொகை அதிகமாக இருக்கவும் வாய்ப்புள்ளது.
மேலும் ஆந்திரப் பிரதேசம் மற்றும் அதன் விவசாயிகளின் உயிர்நாடியாக விளங்கும் போலவரம் பாசனத் திட்டத்தை விரைவில் செயல்படுத்தவும், நிதியுதவி வழங்கவும் மத்திய அரசு முழு அர்ப்பணிப்புடன் இருக்கும் எனத் தெரிவித்தார்.
நடப்பு நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட் 2024 – 25 ! வேளாண்மைக்கு முக்கியத்துவம் – பிஎம் கரீப் அன்ன யோஜனா திட்டம் !
புறக்கணிக்கப்பட்ட தமிழ்நாடு :
தற்போது தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் அரசிற்கு ஆதரவு வழங்கிய பீகார் மற்றும் ஆந்திரா மாநிலங்களுக்கு பல்வேறு திட்டங்களுக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அத்துடன் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உரையில் தமிழ்நாடு என்ற வார்த்தை ஒருமுறை கூட இடம்பெறவில்லை,
அதன் பின்னர் பட்ஜெட் உரை தொடங்கும் முன் திருக்குறள் போன்ற தமிழ் இலக்கியத்துடன் உரை தொடங்கும் இந்த முறை அதுவும் இடம்பெறவில்லை என எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றனர்.