நடப்பு நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட் 2024 - 25 ! வேளாண்மைக்கு முக்கியத்துவம் - பிஎம் கரீப் அன்ன யோஜனா திட்டம் !நடப்பு நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட் 2024 - 25 ! வேளாண்மைக்கு முக்கியத்துவம் - பிஎம் கரீப் அன்ன யோஜனா திட்டம் !

தற்போது மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நடப்பு நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட் 2024 – 25 நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து பல்வேறு துறை சார்ந்த அறிவிப்புகளை தாக்கல் செய்து வருகிறார்.

தற்போது மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2024 – 2025ம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறார். அத்துடன் அவர் தாக்கல் செய்யும் மத்திய பட்ஜெட்டிற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. மேலும் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ராஷ்டிரபதி பவனில் சந்தித்து பட்ஜெட் நகலை குடியரசு தலைவர் திரெளபதி முர்முவிடம் அளித்து ஒப்புதலை பெற்றார். இதனையடுத்து பட்ஜெட் உரையை பெற்றுக்கொண்ட குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு இனிப்பு வழங்கி தனது வாழ்த்துகளை தெரிவித்தார்.

மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்து வரும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விவசாயம் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அந்த வகையில் விவசாயத்தை டிஜிட்டல் தொழில்நுட்பத்தை நடைமுறைப்படுத்த மாநில அரசுகளுடன் இணைந்து எடுக்கப்படும் என்றும்,

அதே சமயம் அடுத்த இரண்டு ஆண்டுகளில் ஒரு கோடிக்கும் மேற்பட்ட விவசாயிகளை இயற்கை விவசாயத்தில் ஈடுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

நீட் தேர்வில் 11000 மாணவர்கள் பூஜ்ஜியம் மதிப்பெண் பெற்றுள்ளனர் – தேர்வு மையம் வாரியாக வெளியிட்ட பட்டியலில் தகவல் !

தற்போது 80 கோடி மக்களுக்கு இலவச உணவு தானியம் வழங்கும் பிஎம் கரீப் அன்ன யோஜனா திட்டம் அடுத்த 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

வேளாண் மற்றும் அது சார்ந்த துறைகளுக்கு 1.52 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *