Home » செய்திகள் » மத்திய பட்ஜெட் 2025-2026ல் வரி விலக்குக்கு வாய்ப்பு.., வரி செலுத்துவோருக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்!!

மத்திய பட்ஜெட் 2025-2026ல் வரி விலக்குக்கு வாய்ப்பு.., வரி செலுத்துவோருக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்!!

மத்திய பட்ஜெட் 2025-2026ல் வரி விலக்குக்கு வாய்ப்பு.., வரி செலுத்துவோருக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்!!

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட் 2025-2026ல் வரி விலக்குக்கு வாய்ப்பு இருப்பதாக சமூக வலைத்தளத்தில் முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது.

இந்த ஆண்டு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வருகிற பிப்ரவரி மாதம் 1 ஆம் தேதி மத்திய பட்ஜெட் 2025-2026 தாக்கல் செய்ய இருக்கிறார். அந்த பட்ஜெட் தாக்கலில் வரி செலுத்துவோருக்கு நிவாரணம் வழங்கும் விதமாக புதிய வரி முறையில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் இருக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதுமட்டுமின்றி, இந்த புதிய வரி முறைகளில், 10 லட்சம் வரை ஆண்டு வருமானத்தை வரி விலக்கு அளிப்பது மற்றும் 15 லட்சம் முதல் 20 லட்சம் வரை ஆண்டு வருமானத்திற்கு புதிய 25% வரி அடுக்கை அறிமுகப்படுத்துவது உள்ளிட்ட விதிமுறைகள் அடங்கும் என்று மத்திய அரசு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனவே இந்த ஆண்டு புதிய வரி விதிப்பு முறையின் கீழ், வருடத்திற்கு 7.75 லட்ச ரூபாய் வரை சம்பாதிக்கும் ஊழியர்கள், ஊதியம் வாங்கும் வரி செலுத்துவோருக்கு வரி பொறுப்பு இல்லை என்று கூறப்படுகிறது.

அதுமட்டுமின்றி 75,000 ரூபாய் நிலையான விலக்கு நடைமுறையில் இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் வருடத்திற்கு 15 லட்ச ரூபாய்க்கு மேல் வருமானம் 30% என்ற அதிகபட்ச வரி அடுக்கின் கீழ் வருகிறது. எனவே இது தொடர்பான மாற்றங்களை மத்திய அரசு பரிசீலித்து வருவதாக அரசியல் வட்டாரங்கள் கூறி வருகின்றனர். இதனால் ஆண்டு பட்ஜெட்டில் இருந்து 2 வரி விதிகளின் கீழும் தள்ளுபடிகள் மற்றும் வரி குறைப்புகளை எதிர்பார்த்து மக்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்

ஜனவரி 26 ஞாயிற்றுக்கிழமை மதுக்கடைகளுக்கு விடுமுறை.., வெளியான ஷாக்கிங் தகவல்!!

சயீப் அலிகான் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்.., அடுத்த மூவ் என்ன தெரியுமா?

இன்றைய (ஜனவரி 21) காய்கறிகளின் விலை.., முழு பட்டியல் இதோ!!

லக்னோ அணியின் கேப்டனாக ரிஷப் பண்ட் நியமனம்.., LSG ஜெர்ஸி வழங்கிய சஞ்சீவ் கோயங்கா!!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top