தற்போது நடைபெற்று வரும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
ஒரே நாடு ஒரே தேர்தல்:
ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் இந்த மசோதா தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்:
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த நவம்பர் 25ம் தேதி துவங்கி வரும் 20ம் தேதி வரை நடைபெற உள்ளது. அந்த வகையில் இந்த கூட்டத்தொடரில் பல முக்கியமான மசோதாக்களை நிறைவேற்ற மோடி தலைமையிலான மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. ஆனால் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அதானி விவகாரம் உள்ளிட்டவை குறித்து விவாதிக்க அனுமதிக்க கோரி அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஒரே நாடு ஒரே தேர்தல் மத்திய அமைச்சரவை ஒப்புதல்:
இந்நிலையில் இன்று டில்லியில் பிரதமர் மோடி தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை தொடர்ந்து அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு விரைவில் இந்த மசோதாவை சட்டமாக்கி நடைமுறைப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது.
PF பணத்தை இனி ATMல் எடுக்கலாம் – 2025ல் அமலுக்கு வரும் புதிய வசதி!
எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு:
இந்த மசோதாவுக்கு எதிர்க்கட்சியினர் ஒரே நாடு ஒரே தேர்தல் முறையை அமல்படுத்தக் கூடாது என திட்டவட்டமாக எதிர்த்து வருகின்றனர். மேலும் இந்தத் திட்டத்தை அமல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் பற்றி முன்னாள் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் குழு ஆராய்ந்து மத்திய அரசிடம் அறிக்கை சமர்ப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய செய்திகள்:
மனைவியை டைவர்ஸ் செய்த சீனு ராமசாமி – 17 வருட திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்தது!
மாணவர்களுக்கு Happy நியூஸ்…2024 அரையாண்டு தேர்வு ஒத்திவைப்பு.. பள்ளி கல்வித்துறை அறிவிப்பு!
தனியார் மயமாகும் ரயில்வே நிர்வாகம்? உறுதி செய்த மத்திய அரசு!
அரசு ஊழியர்களுக்கு ரூ. 25000 ஊதியம் உயர்வு – மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
வாட்ஸ் அப்பில் ஆன்லைன் கவுண்டர் ரிமைண்டர் வசதி – இனி மெசேஜ் பார்க்காம யாரும் தப்ப முடியாது!