PM SHRI திட்டத்தில் தமிழ்நாடு அரசு கையெழுத்திட வேண்டும் - மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் வலியுறுத்தல் !PM SHRI திட்டத்தில் தமிழ்நாடு அரசு கையெழுத்திட வேண்டும் - மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் வலியுறுத்தல் !

தற்போது PM SHRI திட்டத்தில் தமிழ்நாடு அரசு கையெழுத்திட வேண்டும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு எழுதியுள்ள கடிதத்தில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் வலியுறுத்தல்.

தமிழ்நாட்டிற்கு 2024 – 2025 நிதியாண்டில் சமக்ரா சிக்ஷா அபியான் திட்டதிற்கு வழங்க வேண்டிய 2,152 கோடி தொகையை விடுவிக்க வேண்டும் என தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு கடிதம் எழுதியிருந்தார்.

இந்நிலையில் பி.எம்.ஸ்ரீ திட்டத்தில் தமிழ்நாடு அரசு கையெழுத்திட வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மத்திய அமைச்சர் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் பி.எம்.ஸ்ரீ திட்டத்தில் கையொப்பமிடுவதாக 15.03.2024ல் தமிழக அரசு உறுதி அளித்திருந்தது.

மேலும் தேசிய கல்வி கொள்கையை ஏற்க முன்வர வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

அமெரிக்காவில் முதல் நாளில் ரூ.900 கோடி முதலீடுகள் ஈர்ப்பு – முதல்வர் மு.க.ஸ்டாலின் சமூகவலைத்தளத்தில் பதிவு

அந்த வகையில் மற்ற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை போல் பி.எம்.ஸ்ரீ திட்டத்தில் தமிழகம் கையெழுத்திட வலியுறுத்துகிறேன் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதில் கடிதம் எழுதியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *