தற்போது Time Machine மூலம் இளமையாக்குவதாக ரூ.35 கோடி மோசடி செய்த உத்திரபிரதேச மாநிலத்தை சேர்ந்த ராஜீவ் குமார் மற்றும் இவரது மனைவி ரஷ்மி ராஜீவ் ஆகிய இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.
Time Machine மூலம் இளமையாக்குவதாக ரூ.35 கோடி மோசடி
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
உத்தரப் பிரதேசம் :
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூர் கித்வாய் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜீவ் குமார். இவரது மனைவி ரஷ்மி ராஜீவ்.
அந்த வகையில் இந்த தம்பதிகள் தங்களிடம் இஸ்ரேலில் இருந்து கொண்டு வரப்பட்ட Time Machine மூலம் முதியவர்களை 25 வயது இளைஞர்களாக மாற்ற முடியும் என கூறி ஒரு சிகிச்சை மையத்தை திறந்துள்ளனர்.
இதன் மூலம் 20 க்கும் மேற்பட்ட தம்பதிகளிடம் மோசடி செய்துள்ளதாக பரபரப்பு குற்றசாட்டு முன் வைக்கப்பட்டுள்ளது.
ஆக்சிஜன் தெரபி :
இதற்கு இவர்கள் ‘ஆக்சிஜன் தெரபி’ என்று விளம்பரம் செய்துள்ளனர். மேலும் 10 அமர்வுகளுக்கு ரூ.6 ஆயிரம் என கட்டணம் வசூலித்துள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் 3 வருடத்திற்கு ரூ.90 ஆயிரம் சிறப்பு பேக்கேஜ் திட்டம் என்றும் விளம்பரம் கொடுத்துள்ளனர்.
அதுமட்டுமல்லாமல் புதிய வாடிக்கையாளர்களை அழைத்து வருபவர்களுக்கு தள்ளுபடி என பல்வேறு வகைகளில் மோசடி செய்துள்ளனர்.
அவ்வாறு இளைஞர்களாக மாற வேண்டும் என்ற ஆசையில் முதியவர்கள் சிலர் இந்த ஆக்சிஜன் தெரபி சிகிச்சை மேற்கொண்டுள்ளனர். அதன் பின்னர் தான் இது மோசடி என்று அவர்களுக்கு தெரியவந்துள்ளது.
காவல் நிலையத்தில் புகார் :
இந்நிலையில் இந்த மோசடியில் பாதிக்கப்பட்டவர்களில் ஒருவரான ரேணு சிங் என்பவர் காவல்நிலையத்தில் தன்னை ரூ.10.75 லட்சம் வரை ஏமாற்றி விட்டதாக புகார் அளித்துள்ளார்.
நடிகை சோனாவிற்கு நள்ளிரவில் நேர்ந்த விபரீதம் – வீட்டிற்கு நுழைந்த மர்ம நபர்கள் – என்ன நடந்தது?
இதனை தொடர்ந்து இந்த புகாரை அடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியபோது, 100க்கும் மேற்பட்டவர்களிடம் இந்த தம்பதிகள் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து முதியவர்களிடம் இந்த தம்பதி ரூ.35 கோடி ரூபாய் நூதனமாக மோடி செய்து தலைமறைவாகியுள்ளது.
தற்போது இவர்களை போலீசார் தேடிவருகின்றனர்.மேலும் அவர்கள் நாட்டை விட்டு தப்பிக்காமல் இருக்க விமனநிலையங்களில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.