Home » செய்திகள் » “Helmet” அணியாமல் வந்தால் பெட்ரோல் இல்லை.., அரசின் புதிய உத்தரவு!!

“Helmet” அணியாமல் வந்தால் பெட்ரோல் இல்லை.., அரசின் புதிய உத்தரவு!!

"Helmet" அணியாமல் வந்தால் பெட்ரோல் இல்லை.., அரசின் புதிய உத்தரவு!!

ஹெல்மெட் Helmet அணியாமல் வந்தால் பெட்ரோல் இல்லை என்று உத்திரபிரதேச மாநில அரசு புதிய உத்தரவ பிறப்பித்துள்ளது.

கடந்த சில வருடங்களாக சாலை விபத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க போக்குவரத்து துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பொதுவாக இந்தியாவில் ஹெல்மெட் அணிவது கட்டாயம் என்பது நாம் அறிந்ததே. ஆனால் இந்த விதியை பெரும்பாலான மக்கள் மதிப்பதில்லை.

“Helmet” அணியாமல் வந்தால் பெட்ரோல் இல்லை.., அரசின் புதிய உத்தரவு!!

இதனாலேயே அபராதம் விதித்து அரசு உத்தரவிட்டது. இருந்தாலும் மக்கள் இதை கடைபிடித்தபாடில்லை. இந்நிலையில், உத்திரபிரதேச மாநிலத்தில் சாலை விபத்துகளால் வருடந்தோறும் சுமார் 25000 பேர் உயிரிழப்பதாக அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். இதனால் தற்போது அதிரடி திட்டத்தை கொண்டு வந்துள்ளார். அதாவது, இனிமேல் ஹெல்மெட் அணியாதவர்களுக்கு பெட்ரோல் கிடையாது என்று அரசு முடிவு செய்துள்ளது.

அதன்படி, வருகிற ஜனவரி 26 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வர இருக்கிறது. மேலும், பெட்ரோல் நிலையங்களில், ‘தலைக்கவசம் இல்லையென்றால், பெட்ரோல் இல்லை’ என்ற வாசகங்கள் பொருத்தப்பட வேண்டும் என்றும் அரசு தெரிவித்துள்ளது. இதற்கு முன்னர் முன்னதாக கடந்த 2019 ஆம் ஆண்டு கௌதம் புத்த நகர் மாவட்டத்தில் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்

குழந்தை பெறும் தாய்மார்களுக்கு 81 ஆயிரம் உதவித்தொகை .., அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தவெக கட்சி போட்டி?.., புஸ்ஸி ஆனந்த் அறிவிப்பு!!

நாளை தவெக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்.., TVK தலைவர் விஜய் கலந்து கொள்வாரா?

ஈரோடு கிழக்கு தொகுதியில் பொங்கல் தொகுப்பு வழங்க முடியாத சூழ்நிலை.., என்ன காரணம் தெரியுமா?

இந்த ஆண்டு 2025 பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் ..  முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top