உபியில் – உத்தர பிரதேசத்தில் உள்ள கோவில்களில் இனி இனிப்பு மற்றும் பதப்படுத்தப்பட்ட பொருட்கள் உள்ளிட்ட பிரசாதத்திற்கு கொண்டு வர கோவில் நிர்வாகம் தடை விதித்துள்ளது.
உபியில் கோவில்களில் இனிப்பு பிரசாதத்திற்கு தடை
சமீபத்தில் திருப்பதி லட்டில் மாட்டு கொழுப்பில் தயாரிக்கப்பட்ட நெய் கலந்துள்ளதாக சர்ச்சை கிளம்பிய நிலையில் தற்போது அந்த விவகாரம் பூதாகாரமாக வெடித்துள்ளது. இதனைத் காரணம் காட்டி கர்நாடக அரசு ஒரு முக்கிய முடிவை எடுத்தது. அதாவது கர்நாடகாவில் இருக்கும் அனைத்து கோயில்களிலும் கொடுக்கப்படும் பிரசாதத்தில் நந்தினி நெய்யை மட்டுமே பயன்படுத்தி தயாரிக்க வேண்டும் என உத்தரவிட்டது.
இந்நிலையில் உத்தர பிரதேசம் அரசும் ஒரு முடிவை எடுத்துள்ளது. அதாவது, தற்போது உத்தர பிரதேசம் மாநிலத்தில் இருக்கும் அலகாபாத் மாவட்டத்தில் உள்ள கோயில்களில் பக்தர்கள் இனிப்புகள் மற்றும் பதப்படுத்தப்பட்ட பொருள்களை பிரசாதமாக கொண்டு வர தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதற்கு பதிலாக பக்தர்கள் தேங்காய், பழங்கள், உலர் பழங்கள் ஆகியவற்றைக் கொண்டு வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, இதுகுறித்து லலிதா தேவி கோயிலின் தலைமை அர்ச்சகர் ஷிவ் முராத் மிஸ்ரா பேசுகையில் இனி கோவில்களில் இனிப்பு பிரசாதம் வழங்கப்பட மாட்டாது என்று தெளிவாக கூறிவிட்டார்.
Also Read: சுற்றுலா பயணிகளுக்கு குட் நியூஸ் – நீலகிரி உதகையில் 2வது மலர் கண்காட்சி தொடக்கம்!
இதனால் பக்தர்கள் தேங்காய், பழங்கள், உலர் பழங்கள் போன்றவைகளை கோவிலுக்கு எடுத்து வரும்படி கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் கோவில்களில் உயர்தர இனிப்புகள் வழங்கும் விதமாக கடைகளை அமைக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
TNPSC குரூப் 2 மற்றும் 2A தேர்வு முடிவுகள் எப்போது?
தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
மோஹித் சர்மாவை கெட்ட வார்த்தையில் திட்டிய தோனி
பாராசிட்டமால் உள்பட 53 மாத்திரைகள் போலியானவை