Home » செய்திகள் » ஸ்மார்ட்போன் ஆர்டர் செய்த நபர்.., பிளிப்கார்ட் கொடுத்த அதிர்ச்சி பொருள்., பதறிய வாடிக்கையாளர்!!

ஸ்மார்ட்போன் ஆர்டர் செய்த நபர்.., பிளிப்கார்ட் கொடுத்த அதிர்ச்சி பொருள்., பதறிய வாடிக்கையாளர்!!

ஸ்மார்ட்போன் ஆர்டர் செய்த நபர்.., பிளிப்கார்ட் கொடுத்த அதிர்ச்சி பொருள்., பதறிய வாடிக்கையாளர்!!

பிளிப்கார்ட் பார்சல் நிறுவனத்தில் ஸ்மார்ட் போன் ஆர்டர் செய்த நபர் பார்சலை திறந்து பார்த்த போது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

பிளிப்கார்ட் பார்சல் நிறுவனத்தின் மூலம் எக்கசக்க மக்கள் தாங்களுக்கு விருப்பமான பொருட்களை ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்து வாங்கி கொள்கின்றனர். ஆனால் இந்த ஆன்லைன் மூலம் பொருட்களை ஆர்டர் செய்த வாடிக்கையாளர்களுக்கு சில ஏமாற்றங்களும்  கிடைத்து வருகிறது. சொல்ல போனால் தாங்கள் ஆர்டர் செய்த பொருட்களுக்கு பதிலாக வேறொரு பொருட்களை மாற்றி அனுப்பி வைக்கின்றனர். அந்த வகையில் உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தை சேர்ந்த ஒரு வாடிக்கையாளர் கடந்த 28-ந் தேதி பிளிப்கார்ட்டில் ரூ.22 ஆயிரம் மதிப்புள்ள ஸ்மார்ட் போனை ஆர்டர் செய்துள்ளார்.

இன்று அவருக்கு ஆர்டர் விநியோகம் செய்யப்பட்ட நிலையில், திறந்து பார்த்த போது வாடிக்கையாளருக்கு அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. அதாவது அந்த பார்சலில் ஸ்மார்ட்போனுக்கு பதிலாக வெறும் கற்கள் மட்டுமே இருந்துள்ளது. ஸ்மார்ட் போனுக்கு பதிலாக கற்கள் இருந்த புகைப்படத்தையும் பதிவிட்டு பிளிப்கார்ட் நிறுவனத்திடம் புகார் தெரிவித்தார். இது குறித்து பிளிப்கார்ட் நிறுவனம் விளக்கம் கொடுத்துள்ளது. அதில் மன்னித்து கொள்ளுங்கள். நீங்கள் ஆர்டர் செய்த பொருளை  தவிர வேறு எதையும் அனுப்புவதற்கு நாங்கள் விரும்ப மாட்டோம். இந்த நிகழ்வுக்காக மிகவும் வருந்துகிறோம். உங்களுக்கு மேலும் உதவி செய்ய செய்து உங்கள் ஆர்டர் விவரங்களை வழங்கவும் என தெரிவித்துள்ளது.

மாணவர்களே குட் நியூஸ்., இனி உங்களுக்கும் ரூ.1,000 உதவித்தொகை., அமைச்சர் உதயநிதி அறிவிப்பு!!!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top