யுபிஎஸ்சி தலைவர் மனோஜ் சோனி ராஜினாமா - பதவிக்காலம் நிறைவடைய 5 ஆண்டுகள் நிலையில் தீடீர் முடிவு !யுபிஎஸ்சி தலைவர் மனோஜ் சோனி ராஜினாமா - பதவிக்காலம் நிறைவடைய 5 ஆண்டுகள் நிலையில் தீடீர் முடிவு !

மத்திய பணியாளர் தேர்வாணையமான யுபிஎஸ்சி தலைவர் மனோஜ் சோனி ராஜினாமா செய்துள்ள சம்பவம் தற்போது பேசுபொருளாகியுள்ளது.

அத்துடன் பதவிக்காலம் முடிய 5 ஆண்டுகள் உள்ள நிலையில் ராஜினாமா செய்த சம்பவம் தேசிய அளவில் பேசுபொருளாகியுள்ளது.

இந்திய அரசு பணியாளர் தேர்வாணையமான யு.பி.எஸ்.சி தலைவர் பதவியிலிருந்து மனோஜ் சோனி தனது பதவியை திடீரென ராஜினாமா செய்திருப்பது தேசிய அளவில் தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது.

மேலும் இவர் தனது தனிப்பட்ட காரணங்களுக்காக தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக தெரிவித்திருக்கிறார்.

அந்த வகையில் 2017ஆம் ஆண்டு மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தின் உறுப்பினராக சேர்ந்த மே 16, 2023 ஆண்டு யு.பி.எஸ்.சி தலைவராக மனோஜ் சோனி பதவியேற்றுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை தொடர்ந்து இவரது பதவிக் காலம் வரும் 2029 ஆம் ஆண்டு முடிவடைகின்ற சூழலில் அதற்கு முன்பாக திடீரென தனது பதவியை ராஜினாமா கொடுத்துள்ளார். மேலும் ஒரு மாதத்திற்கு முன்பே தனது ராஜினாமா கடிதத்தை அளித்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த ராஜினாமா கடிதத்தை குடியரசு தலைவர் திரௌபதி முர்மு ஏற்கும் பட்சத்தில் உடனடியாக விடுவிக்கப்படுவார்.

இதனை தொடர்ந்து மனோஜ் சோனி பதவி விலகலுக்கான காரணம் தற்போது தேசிய அளவில் பேசுபொருளாக மாறியுள்ளது.

இதற்க்கு முன் நீட் வினாத்தாள் சர்ச்சை எழுந்ததை தொடர்ந்து யு.பி.எஸ்.சி நடைமுறையில் சில சர்ச்சைகள் வெடித்தன.

அந்த வகையில் பூஜா கேட்கர் என்ற பெண் ஐஏஎஸ் அதிகாரி மாற்றுத் திறனாளி என்ற பெயரில் போலியான சான்றிதழ் வழங்கி பணியில் சேர்ந்துள்ளார்.

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மீது வழக்குப்பதிவு – என்ன காரணம் தெரியுமா?

அத்துடன் பயிற்சியின் போதே அதிகாரிக்கு கிடைக்கும் சலுகைகளை பெறும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக பூஜா கேட்கருக்கு எதிராக கிரிமினல் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் யு.பி.எஸ்.சி தலைவர் பதவிலியிலிருந்து மனோஜ் சோனி விலகியிருப்பது பேசுபொருளாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *