நாட்டின் மிக உயரிய பதவிகளுக்கான யூபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வு தேதி அறிவிப்பு குறித்து மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
நாடு முழுவதும் மத்திய அரசின் ஆட்சிப் பணிகளில் சேர விரும்பும் பணியாளர்களுக்கு யூபிஎஸ்சி உள்ளிட்ட பல்வேறு வகையான போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் உள்ளிட்ட காலி பணியிடங்களை நிரப்ப நடத்தப்படும் சிவில் சர்வீஸ் தேர்வு ஒன்றாகும். அந்த வகையில் இந்த ஆண்டிற்கான யுபிஎஸ்சி (UPSC) தேர்வுக்கான அறிவிப்பை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
யூபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வு தேதி அறிவிப்பு.., பிப்ரவரி 11ம் தேதி வரை தான் டைம்?.., விண்ணப்பிப்பது எப்படி?
இது குறித்து வெளியான அறிவிப்பில் கூறியிருப்பதாவது, ” IAS, IFS, IPS உள்ளிட்ட 23 பணியிடங்களுக்கான முதல்நிலைத் தேர்வு மே 25ஆம் தேதி நடைபெற உள்ளது. எனவே இந்தத் தேர்வை எழுத காத்திருக்கும் தேர்வர்கள் https://upsconline .gov.in என்ற இணையதளத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம்.
IPLல் ரீ என்ட்ரி கொடுக்கும் ஏபி. டி. வில்லியர்ஸ்?.., அவரே சொன்ன சூப்பர் தகவல்!!
மேலும் இன்று (ஜனவரி 22) முதல் பிப்ரவரி 11ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த தேர்வில் சந்தேகம் இருப்பின் யூபிஎஸ்சி மையத்தின் வாயிலுக்கு நேரடியாகச் சென்று தெரிந்து கொள்ளலாம். அல்லது, 011- 23385271 / 011-23381125 / 011- 23098543 உள்ளிட்ட தொலைபேசி எண்களைத் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்
ஜனவரி 26 ஞாயிற்றுக்கிழமை மதுக்கடைகளுக்கு விடுமுறை.., வெளியான ஷாக்கிங் தகவல்!!
சயீப் அலிகான் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்.., அடுத்த மூவ் என்ன தெரியுமா?
இன்றைய (ஜனவரி 21) காய்கறிகளின் விலை.., முழு பட்டியல் இதோ!!
லக்னோ அணியின் கேப்டனாக ரிஷப் பண்ட் நியமனம்.., LSG ஜெர்ஸி வழங்கிய சஞ்சீவ் கோயங்கா!!