அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் டொனால்ட் டிரம்பை படுகொலை செய்ய ஈரான் திட்டம் தீட்டியுள்ளதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
டொனால்ட் டிரம்பை படுகொலை செய்ய ஈரான் திட்டம்
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
டிரம்ப் மீது துப்பாக்கிச்சூடு :
அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பை படுகொலை செய்ய ஈரான் சதித் திட்டத்தில் ஈடுபட்டதற்கான தகவல் அமெரிக்க உளவுத்துறைக்கு கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்ட்டுள்ளது தற்போது உலக நாடுகளுக்கிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனை தொடர்ந்து பென்சில்வேனியா நகரத்தில் தேர்தல் பிரச்சாரத்தின் போது அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் டிரம்ப் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியவருக்கும் ஈரானுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்றும் தகவல் வெளியாகின.
ஈரான் மறுப்பு :
இதனையடுத்து ஈரானின் சதித்திட்டம் தெரியவந்ததையடுத்து டிரம்ப்க்கான ரகசிய உளவுப்பிரிவினரின் பாதுகாப்பானது தற்போது அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனிடையில் அமெரிக்காவின் சதித்திட்ட குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என ஈரான் மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆன்லைன் மூலம் மதுபானங்கள் விற்கும் திட்டம் – டாஸ்மாக் நிர்வாகம் விளக்கம் !
அத்துடன் ஜெனரல் சுலைமானியை படுகொலை செய்ய உத்தரவிட்டத்திற்காக டிரம்ப் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டும் என்று ஈரான் கருதுவதாக அந்நாட்டு செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.