அமெரிக்க அதிபர் தேர்தல் 2024: அமெரிக்க அதிபர்  தேர்தல் நேற்று பரபரப்பாக நடைபெற்றது. ஒவ்வொரு மாகாணங்களாக வாக்குப்பதிவு நடைபெற்ற இந்த தேர்தலில் ஆளும் ஜனநாயக கட்சி சார்பாக துணை அதிபர் கமலா ஹாரிஸ் களமிறங்கினார். எனவே அவரை எதிர்த்து குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் போட்டியிட்டார்.

அமெரிக்க அதிபர் தேர்தல் 2024

இதனை தொடர்ந்து இன்று அதிகாலை 5.30 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடைந்தது. வாக்குப்பதிவு நிறைவடைந்ததும் உடனடியாக வாக்குகள் எண்ணும் பணி தொடங்கின. அதன்படி டொனால்டு டிரம்ப் 207 எலெக்ட்ரோல் வாக்குகளை பெற்று முன்னிலை வகித்து வருகிறார். அதே நேரம் கமலா ஹாரிஸ் 179 எலெக்ட்ரோல் வாக்குகளை பெற்று பின் தங்கி இருந்தார்.

மேலும் அமெரிக்க அதிபர் தேர்தலில் மொத்தமுள்ள 538 எலெக்ட்ரோல் வாக்குகளில் 270 வாக்குகளுக்கு மேல் பெற்றால் மட்டுமே வெற்றி பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.  இதை வைத்து பார்க்கும் பொழுது முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற அதிக வாய்ப்பு இருக்கிறது என்று பலரும் கூறி வருகின்றனர்.

தமிழக மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ் – நவம்பர் 13 & 15 ஆம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

  • ஜார்ஜியா: டிரம்ப் – 50.8% மற்றும் கமலா – 48.5%
  • அரிசோனா: டிரம்ப் – 49.8% மற்றும் கமலா – 49.3%
  • நெவேடா: டிரம்ப் – 52.2% மற்றும்  கமலா – 46.1%
  • விஸ்கான்சின்: டிரம்ப் – 51.2% மற்றும் கமலா – 47.3%
  • பென்சில்வேனியா: டிரம்ப் – 50.9% மற்றும் கமலா – 48.1%

இதையும் கொஞ்சம் படிங்க பாஸ்

ரேஷன் கார்டில் KYC அப்டேட் செய்து விட்டீர்களா? இது தான் கடைசி நாள்? 

தமிழகத்தில் வீரியம் எடுக்கும் மெட்ராஸ் ஐ – மருத்துவர்கள் கூறும் விஷயம் என்ன?

ஐபிஎல் போட்டியில் தோனியின் இடத்தை பிடிக்கப்போகும் வீரர்?

TVK தலைவர் விஜய் தலைமையில் முதல் போராட்ட அறிவிப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *