பாம்பின் விஷம் நீங்க கங்கையில் மிதக்கவிடப்பட்ட இளைஞர் ! மூடநம்பிக்கையால் பறிபோன உயிர் - இந்த சம்பவத்தால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி !பாம்பின் விஷம் நீங்க கங்கையில் மிதக்கவிடப்பட்ட இளைஞர் ! மூடநம்பிக்கையால் பறிபோன உயிர் - இந்த சம்பவத்தால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி !

பாம்பின் விஷம் நீங்க கங்கையில் மிதக்கவிடப்பட்ட இளைஞர். உத்தரபிரதேச மாநிலம் புலன்சாகர் மாவட்டத்திற்கு உட்பட்ட ஜஹாங்கிராபாத் பகுதியில் 20 வயது மதிக்கத்தக்க வாலிபரான மோகித் என்பவர் கல்லூரியில் பிகாம் இறுதி ஆண்டு படித்து வந்துள்ளார். தற்போது நடைபெற்ற மக்களவை தேர்தலில் வாக்கு செலுத்துவதற்காக கடந்த 26- ந்தேதி கிராமத்தில் உள்ள தனது வீட்டிற்கு வந்துள்ளார். வாக்களித்ததற்கு பிறகு வயலுக்கு சென்றபோது பாம்பு கடிக்கு ஆளாகி இருக்கிறார்.

இந்நிலையில் அந்த இளைஞரின் உறவினர்கள் சிலர் முதலில் அருகில் இருந்த மருத்துவரிடம் அழைத்துச் சென்று இருக்கிறார்கள். ஆனால் மருத்துவத்தால் சரி ஆகாது என்று கருதி கங்கை நதியில் உடம்பை வைத்திருந்தால் பாம்பு கடியின் விஷம் தானாக இறங்கி விடும் என்று சிலர் கூற மூடநம்பிக்கையால் கயிறு கட்டி இரண்டு தினங்களாக மோகித்தின் உடலை கங்கை நதியில் மிதக்க வைத்துள்ளனர்.

ஆனால் இவ்வாறு செய்த மூடநம்பிக்கை எதுவும் அந்த வாலிபரை காப்பாற்றவில்லை. மாறாக பாம்பு விஷம் உடலில் ஏறி பரிதாபமாக அந்த வாலிபர் உயிரிழந்துள்ளார். இந்நிலையில் உயிர் இருக்கிறதா இல்லையா என சோதிக்காமல் கூட கங்கை நதியிலேயே மிதக்கவிட்டுள்ளனர். மேலும் 2 நாட்கள் கங்கை நீரில் மிதந்த இளைஞரின் உடலை பார்த்த அப்பகுதி மக்கள் மீட்டனர்.

விருதுநகர் கல்குவாரி வெடி விபத்து ! FIR ல் வெளியான அதிர்ச்சி தகவல் – இந்த காரணத்தால் தான் வெடிவிபத்து நிகழ்ந்தது !

நடந்த இந்த சம்பவம் தொடர்பாக போலீசார், சம்பந்தப்பட்ட குடும்பத்தினரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஓடும் கங்கை நீரில் உடலை வைப்பதால் விஷம் நீங்கும் என்று மூடநம்பிக்கையால், இளைஞரின் உயிர் பறிபோன சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *