
Breaking News: உ.பியில் மத பிரச்சார கூட்ட நெரிசலில் சிக்கி 27 பேர் உயிரிழப்பு: உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் இருக்கும் புல் ராய் கிராமத்தில் இன்று பயங்கரமான சம்பவம் அரங்கேறியுள்ளது. அதாவது அந்த பகுதியில் பாபா என்ற சாமியார் சத்சங் என்ற இந்து மத பிரசார கூட்டம் நடத்தினார்.
உ.பியில் மத பிரச்சார கூட்ட நெரிசலில் சிக்கி 27 பேர் உயிரிழப்பு
இந்த கூட்டத்தில் 1000 கணக்கானோர் கலந்து கொண்டனர். இதனால் அங்கு கடும் நெரிசல் ஏற்பட்டது. மேலும் இந்த கூட்ட நெரிசலில் சிக்கி கிட்டத்தட்ட 27 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதில் 25 பேர் பெண்கள் என்பது மிகவும் வருத்தமளிக்கிறது.
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
இதனை தொடர்ந்து அவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு வெளியே வைக்கப்பட்டுள்ள வீடியோ நெஞ்சை கசக்கிறது. மேலும் 100 க்கும் மேற்பட்ட மக்கள் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து வருகின்றனர்.
அதுமட்டுமின்றி அங்கு சிக்கி இருக்கும் மக்களை மீட்பு படையினர் மீட்டு பஸ் மற்றும் வேன்களில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்நிலையில் ஹத்ராஸ் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்துள்ளார். Uttar Pradesh – indian news – viral news – shocking video
Also Read : புதன்கிழமை நாளை மின்தடை பகுதிகள் (03.07.2024) ! மின்சார வாரியத்தின் மூலம் தெரிவிக்கப்பட்ட அதிகாரபூர்வ அறிவிப்பு !
மேலும் செய்திகளுக்கு இதை கிளிக் செய்யுங்கள்
NEET Re-Exam Result 2024 – நீட் மறுதேர்வு முடிவுகள் வெளியீடு
வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட காட்டு யானை
Gas Cylinders Price: கேஸ் சிலிண்டர் விலை குறைவு
ஆர்சிபியின் புதிய பேட்டிங் பயிற்சியாளராக தினேஷ் கார்த்திக் நியமனம்