உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள முக்கிய பகுதியான ஹல்த்வானியில் இருக்கும் மதரஸா மற்றும் அதன் அருகில் உள்ள மசூதி சட்டவிரோதமாக இடிக்க சொல்லி நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து அரசு அதிகாரிகள் மசூதியை இடித்த நிலையில் ஏராளமான போலீஸார் அங்கு குவிக்கப்பட்டனர். அந்த சமயத்தில் ஹல்த்வானி, வான்புல்புரா பகுதியை சேர்ந்த மக்கள் மசூதியை இடிப்பதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், போலீசுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
ஒரு கட்டத்தில் மக்களுக்கும் போலீசுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. அப்போது காவல்துறை மற்றும் அதிகாரிகள் மீது மக்கள் கல்லை வீசத் தொடங்கிய நிலையில், அவர்களை கட்டுக்குள் கொண்டு வர காவல்துறை கண்ணீர் புகை குண்டுகளை வீசி பதிலடி கொடுத்தனர். இதற்கிடையில் போலீஸ் ஸ்டேஷனில் வெளியே நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன.
இதனால் வன்முறை வெடித்த நிலையில் பெண்கள் உள்பட ஆத்திரமடைந்த குடியிருப்புவாசிகள் வீதிகளில் போராட்டத்தில் இறங்கினர். அப்போது கடும் ஆத்திரத்தில் இருந்த மக்கள் கிட்டத்தட்ட 20-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் மற்றும் 2 பேருந்துகளுக்கு தீ வைத்தனர். அதைத் தொடர்ந்து போராட்டத்தை கட்டுப்படுத்த நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். 300 பேர் படுகாயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் உலகமெங்கும் பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அப்பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது