சுரங்க பாதையில் மாட்டிக்கொண்ட 41 உயிர்கள்
உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசி அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் கடந்த ஆண்டு சுரங்கம் தோண்டும் பணி நடைபெற்று வந்தது. தொடர்ந்து பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 12ஆம் தேதி எதிர்பாராத விதமாக இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இதில் கிட்டத்தட்ட 42 பேர் சிக்கி கொண்டனர். உடனே பேரிடர் மீட்பு பணி களமிறங்கி அவர்களை காப்பாற்றும் பணியில் ஈடுபட்டனர். பல நாட்கள் கடந்த நிலையில் தொழிலாளர்கள் மீட்பு பணியில் எந்தவித முன்னேற்றமும் இல்லாமல் இருந்து வந்தது.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
இதனை தொடர்ந்து ‘எலி வளை சுரங்கத் தொழிலாளர்கள்’ எனப்படும் சிறிய குகைக்குள் சென்று துளையிடும் அனுபவம் வாய்ந்த 12 சுரங்கப் பணியாளர்கள் களத்தில் இறங்கி அனைவரையும் காப்பாற்றினர். ‘எலி வளை சுரங்கத் தொழிலாளர்கள்’ தலைவனாக இருந்து வந்த வகீல் ஹாசன் என்பவரின் வீட்டை டெல்லி மேம்பாட்டு ஆணையம் இடித்து தரைமட்டமாக்கிய சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து வெளியிட்ட வீடியோவில்,” கஜோரி காஸ் பகுதியில் ஆக்கிரமிப்பு இடத்தில் வீடுகள் கட்டப்பட்டதாகக் கூறி இடித்து விட்டனர். தற்போது என் குழந்தைகளுடன் சாலை ஓரத்தில் இருந்து வருகிறேன். இப்படி வீடுகளை இடிப்பது தொடர்பாக அரசு எந்தவித முன்னறிவிப்பும் எனக்கு வழங்கப்படவில்லை என்று கூறியுள்ளார். இது தற்போது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.