தமிழ் சினிமாவில் 80ஸ், 90ஸ் காலகட்டத்தில் ரஜினி, கமல் என இரண்டு ஜாம்பவான்கள் இருந்த சமயத்தில் தனது கொடியை பறக்க விட்டவர் தான் கேப்டன் விஜயகாந்த். இவர் கடந்த மாதம் 27ம் தேதி உடல்நலக்குறைவால் உயிரிழந்த சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது என்று தான் சொல்ல வேண்டும். அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்த விஜய், கமல், ரஜினி உள்ளிட்ட பிரபலங்கள் நேரில் சென்ற நிலையில், கேப்டனால் முன்னுக்கு வந்த சில நடிகர்கள் எட்டி கூட பார்க்கவில்லை என்று வறுத்தெடுத்து வருகின்றனர்.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!!
குறிப்பாக வடிவேலு ஏன் வரவில்லை என்று கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் வடிவேலு வராததன் காரணம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதாவது கேப்டன் இறந்த சமயத்தில் அவருக்கு உடல்நிலை சரியில்லை என்றும், அவரின் இறப்பை கேட்டு ஒரு நாள் முழுவதும் சாப்பிடாமல் வருத்தப்பட்டதாக வடிவேலு நண்பர் ஒருவர் கூறியுள்ளார். மேலும் அவர் கண்டிப்பாக விஜயகாந்த் நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்துவார் என்று கூறினார். இது ஒரு பக்கம் இருக்க, இன்னொரு பக்கம் உடல்நிலை சரியில்லாத நேரத்தில் எதற்கு கலைஞர் 100வது விழாவுக்கு வடிவேலு வர வேண்டும் என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.