சுந்தர் சி இயக்கத்தில் வடிவேலு நடித்த கேங்கர்ஸ் திரைப்படம் எப்படி இருக்கு என்பது குறித்து சினிமா வட்டாரங்களில் தகவல் வெளியாகியுள்ளது.
வடிவேலுவின் கேங்கர்ஸ்:
தமிழ் சினிமாவின் காமெடி ஜாம்புவான் என்று அனைவராலும் கொண்டாடப்படுபவர் தான் வைகை புயல் வடிவேலு. இவரை எப்போது திரையில் பார்த்தாலும் போதும் சிரிப்புக்கு பஞ்சமே இருக்காது. அதுவும் சில குறிப்பிட்ட நடிகர்கள் மற்றும் இயக்குநர்களுடன் வடிவேலு ஜோடி போட்டு காமெடி செய்யும் போது அந்த காமெடி சீன்கள் வேற லெவலில் இருக்கும். இதற்கு உதாரணம் சுந்தர் சி – வடிவேலு காம்போ தான்.
கேங்கர்ஸ் திரைப்படம் எப்படி இருக்கு?.., சுந்தர்.சி – வடிவேலு காம்போ வெற்றி பெறுமா?
அதன்படி, அவர்கள் சேர்ந்து நடித்த வின்னர், தலைநகரம், நகரம் மறுபக்கம் என அனைத்து படங்களில் காமெடி அல்டிமேட்டாக இருக்கும். அந்த வகையில் தற்போது இந்த வெற்றி காம்போ மீண்டும் இணைந்து உருவாகியுள்ள திரைப்படம் தான் கேங்கர்ஸ். இந்த படத்தை சுந்தர் சி இயக்கி உள்ளார். இப்படத்தில் அவருடன் சேர்ந்து வடிவேலு, கேத்ரின் தெரசா, வாணி போஜன், முனீஸ்காந்த் ஆகியோர் நடித்துள்ளனர். இதனாலேயே இந்த படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.
டிராகன் கயாடு லோஹருக்கு அடித்த ஜாக்பாட்.. முன்னணி ஹீரோவுக்கு ஜோடியா?
இந்த நிலையில், கேங்கர்ஸ் திரைப்படம் எப்படி உள்ளது என்பது குறித்து திரை வட்டாரத்தில் சிலர் கூறியுள்ளனர். அதாவது இந்த படத்தை பார்த்த அவர்கள், படம் சிறப்பாக வந்திருக்கிறது என்றும், வைகை புயல் வடிவேலு பல கேரக்டர்களில் மிரட்டியிருக்கிறார் என்று கூறியுள்ளனர். இப்படம் அடுத்த மாதம் 24ம் தேதி திரைக்கு வர இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தின் மூலம் நகைச்சுவை நாயகனாக மீண்டும் என்ட்ரி கொடுப்பாரா என்று பொறுத்து இருந்து பார்க்கலாம்.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்
பிக்பாஸ் முத்துக்குமரனின் வீட்டை பார்த்துள்ளீர்களா?.., அழகிய புகைப்படம் உள்ளே!!
தளபதி 69 டைட்டில் என்ன தெரியுமா?.., விஜய் பட தலைப்பு தான்? ரசிகர்கள் ஷாக்!!
பிக்பாஸிற்கு பிறகு அன்ஷிதாவுக்கு அடித்த ஜாக்பாட்.., விஜய் டிவி கொடுத்த பிரம்மாண்ட வாய்ப்பு!!