வைகை எக்ஸ்பிரஸ் புறப்படும் நேரம் மாற்றம். வைகை எக்ஸ்பிரஸ் ரயில் புறப்படும் நேரம் மாற்றப்படுகிறது. சமீபத்தில் நெல்லை டு சென்னைக்கு வந்தே பாரத் ரயில் தொடங்கப்பட்டது. இதனால் வைகை எக்ஸ்பிரஸ் நேரம் மாற்றப்பட உள்ளது. வந்தேவா இல்ல வைகையா. நீங்களே முடிவு பண்ணுங்க.
வைகை எக்ஸ்பிரஸ் புறப்படும் நேரம் மாற்றம் ! வந்தே பாரத்தால் வந்த சோதனை !
மதுரை டு சென்னைக்கு பல ரயில்கள் உண்டு. எத்தனை ரயில்கள் இருந்தாலும் வைகை எக்ஸ்பிரஸ் தனி சிறப்பு உண்டு. இது தூங்கா நகரம் டு தலை நகரத்திற்கு 6 மணி நேரத்தில் சென்று விடும். ஒரு காலத்தில் வைகை எக்ஸ்பிரஸ் தான் இந்தியாவின் அதிவேக ரயிலாக இருந்தது. என்னதான் வந்தே பாரத் போன்ற ரயில்கள் வந்தாலும் இதன் சிறப்பு அழிய வாய்ப்பு இல்லை.
இந்தியாவின் இரண்டாவது ராக்கெட் ஏவுதளம் ! தூத்துக்குடி மாவட்டத்தில் அமைகிறது !
மதுரை மட்டும் அல்லாமல் தென் மாவட்ட மக்களின் முக்கிய ரயிலாக இது இருக்கிறது. வைகை எக்ஸ்பிரஸ் காலை 6 45 மணிக்கு புறப்பட்டு வந்தது. பின்னர் தென் மாவட்ட மக்களின் வசதிக்காக ஏழு மணிக்கு மேல் நேரம் மாற்றப்பட்டது. இப்பொழுது மீண்டும் பழைய நேரத்திற்கு மாற்றப்பட உள்ளது.
கடந்த மூன்று நாட்களுக்கு முன் நெல்லை டு சென்னைக்கு வந்தே பாரத் ரயில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த ரயில் நெல்லையிலிருந்து சென்னைக்கு ஏழு மணி நேரத்தில் செல்லும். வந்தே பாரத் மதுரையிலிருந்து 7.50 மணிக்கு புறப்படுகிறது. வந்தே பாரத் ரயில் செல்லும் வழியில் பல வழிமுறைகள் உண்டு. அதிலும் மிகவும் முக்கியமாக பின்பற்றக் கூடிய ஒரு முறை உண்டு. அதாவது வந்தே பாரத் முன்னர் மற்றும் பின்னர் இரு ரயில் நிலையங்களுக்கு இடையே எந்த ரயிலும் செல்லக்கூடாது. இதன் காரணமாக வைகை எக்ஸ்பிரஸ் ஆங்காங்கே நிறுத்தப்படுகிறது.
JOIN SKSPREAD WHATSAPP CHANNEL | CLICK HERE |
இதனால் அதில் பயணிக்கும் பயணிகள் மிகுந்த சிரமம் அடைகின்றனர். எனவே சரியான நேரத்தில் அவர்களால் செல்ல முடியவில்லை. இதனால் வைகை எக்ஸ்பிரஸ்ஸின் நேரம் மாற்றி அமைக்கப்பட உள்ளது. முன்பு இருந்தது போல காலை 6:40 க்கு புறப்பட நேரம் மாற்றம் செய்யப்படும். இன்னும் ஓரிரு நாளில் இது அமல்படுத்தப்படும். பயணிகளின் நலனுக்காக இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் இந்த மாற்றம் எந்த அளவுக்கு பயன் அளிக்கும் என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.